முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி... அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி... அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

1991 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக முதன்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வந்த தேர்தல்களை அக்கட்சி கூட்டணி அமைத்து சந்தித்தது.

எனினும் மாற்றம், முன்னேற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்து 2016 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்தித்தது. எனினும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தோல்வியை தழுவியது. கடந்த 2021 ஆண்டில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற நிலையில், 5 இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 2026-ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றார். இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டத்தால், அடுத்தடுத்த 2 தற்கொலைகள் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

First published:

Tags: Anbumani ramadoss, PMK