முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கட்சிப் பணிகளை பொறுப்புடன் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை: 10 மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கட்சிப் பணிகளை பொறுப்புடன் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை: 10 மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மு.க ஸ்டாலின்

மு.க ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் அண்டை மாநிலத்திலும் பின்பற்றபடுவதை சுட்டிக்காட்டி, பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கட்சிப் பணிகளை பொறுப்புடன் செய்யாவிட்டால் மாற்றம் செய்யப்படும் என்று 10 மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம், பூத் கமிட்டி அமைப்பது, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதாகவும், உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.

Video: “கர்நாடகாவை போல் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு தலைவர்கள் இல்லை” - கார்த்தி சிதம்பரம்

சுணக்கமாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய ஸ்டாலின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்தி உள்ளிட்ட 10 மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  திமுகவின் தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகளை அண்டை மாநிலத்திலும் பின்பற்றபடுவதை சுட்டிக்காட்டி, பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, DMK cadres, Loksabha, MK Stalin, Tamil Nadu