முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிச்சைக்காரன் படமும்; பணமதிப்பிழப்பும்... இப்படி ஓர் ஒற்றுமையா?

பிச்சைக்காரன் படமும்; பணமதிப்பிழப்பும்... இப்படி ஓர் ஒற்றுமையா?

பிச்சைக்காரன் - பணமதிப்பிழப்பு

பிச்சைக்காரன் - பணமதிப்பிழப்பு

Pichaikaran - Demonetisation: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் -2 திரைப்படம் வெளியான நாளிலேயே, ரூ. 2000 திரும்ப பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது  சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

2000 ரூபாய் நோட்டு, திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்- 2' படத்துடன், இந்த சம்பவத்தை ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இரண்டையும் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், மே 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

அப்படி என்ன ஒற்றுமை?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த மிகப்பெரிய முடிவுகளில் ஒன்று, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான். இந்த அறிவிப்பின்படி, நாட்டில் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அதே ஆண்டில் மார்ச் மாதம், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தில் இந்த பணமதிப்பிழப்பு குறித்து பேசப்பட்டு இருந்தது.

அதன்படி, ஊழலை தடுப்பது குறித்து ஒரு பிச்சைக்காரர் கதாபாத்திரம் பேசும்பொழுது, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் பணப்பதுக்கலை ஒழிக்க முடியும் என கூறுவார். அதே கருத்தை பிரதிபலிக்கும் விதமாக தான், அந்த ஆண்டின் இறுதியில் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது.

இதையும் படிங்க : 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்... பணியாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த டாஸ்மாக் நிர்வாகம்!

இந்த நிலையில் தான் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள, பிச்சைக்காரன் 2 படம் நேற்று வெளியானது. இதிலும் ஊழல் தொடர்பாக விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.  விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படங்கள் வெளியாகிய இரண்டு வருடங்களிலும், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாக இல்லாவிட்டாலும், சுவாரஸ்யமான சம்பவமாக பேசப்படுகிறது.

top videos

    பிச்சைக்காரன் 3 ஆம் பாகம் வெளியானால், அப்போது அரசிடம் இருந்து என்ன அறிவிப்பு வரப்போகிறது என்று நெட்டிசன்கள் வேடிக்கையான கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    First published:

    Tags: Demonetisation, Money, RBI, Vijay Antony