முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசுப் பேருந்துகளில் ரூ.2000 நோட்டு வாங்கப்படுமா? - புதிய அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துத் துறை!

அரசுப் பேருந்துகளில் ரூ.2000 நோட்டு வாங்கப்படுமா? - புதிய அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்துத் துறை!

மாதிரி படம்

மாதிரி படம்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசுப் பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், பயணிகளிடம் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்துள்ள போக்குவரத்துத் துறை, பயணிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தால் பெற்றுக் கொள்ளப்படும் என விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: 2 நாடுகள்... 9 நாட்கள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தின் முழு விவரம்..!

top videos

     அதே நேரத்தில், வெளிநபர்கள், தனியார் நிறுவனங்கள், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மாற்றிக்கொள்ள அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் பெறப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

    First published:

    Tags: Public Transport, RBI