முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்...!

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்...!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

2000 Rupees | பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதுபோல் தற்போதும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெட்ரோல் விற்பனை நிலையங்களில், அதிக அளவில் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் வருவதாக பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் வரும் ரூபாய் நோட்டுகளில் 2000 ரூபாய் தாள்களே 90 சதவிகிதம் வருவதாகவும் சிறிய தொகைக்கு பெட்ரோல், டீசல் போட்டாலும் 2000 ரூபாயை தருவதாகவும் பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதுபோல் தற்போதும் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறும் பெட்ரோல் விற்பனையாளர்கள் 40 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 10 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதேபோல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான சொமோட்டோவில் வார இறுதி நாட்களில் 72 விழுக்காடு பேர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து உணவு வாங்கியதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க... 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது ஏன்...? ரிசர்வ் வங்கி விளக்கம்...!

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ள நிலையில், தற்போது அதிக அளவில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

First published:

Tags: Petrol-diesel, Reserve Bank of India