முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் இருந்து சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 20 ஐயப்ப பக்தர்கள் காயம்..!

தமிழகத்தில் இருந்து சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. 20 ஐயப்ப பக்தர்கள் காயம்..!

பேருந்து விபத்து

பேருந்து விபத்து

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பக்தர்கள் காயமடைந்தனர்.

  • Last Updated :

பங்குனி ஆராட்டுத் திருவிழாவையொட்டி, சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டம் மாயவரத்தில் இருந்து 9 குழந்தைகள் உள்பட 64 பேர் பேருந்தில் சென்றிருந்தனர். தரிசனம் முடித்துவிட்டு திரும்பிய போது, நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பக்தர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்த அனைவரும் கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: Sabarimala