முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை.. திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு.. வெளிநடப்பு..!

நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை.. திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு.. வெளிநடப்பு..!

சட்டமன்றம்

சட்டமன்றம்

சட்டப்பேரவையில் முதல்முறையாக திமுக அரசைக் கண்டித்து அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

  • Last Updated :
  • Chennai, India

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதனை பின்பற்றும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். அப்போது, வேலை நேரத்தை உயர்த்துவதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

எனினும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த சட்டத்தால் தொழிற்சங்கங்களின் உரிமை பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லை என தெரிவித்தார். மேலும், இந்த சட்டத்தின் மூலம் ஏதேனும் பிரச்னை வந்தால், தொழிலாளர்களின் உரிமையைக் காப்போம் எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க; தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை... தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா உழைப்பு சுரண்டலுக்கு வழி வகுக்கும் என குற்றஞ்சாட்டிய திமுக கூட்டணி கட்சிகள், சட்டப்பேரவையில் முதல்முறையாக திமுக அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.நாகை மாலி, 12 மணி நேரம் வேலை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

top videos

    தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகளின் சிந்தனைச் செல்வன்,இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். மசோதாவை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சிபிஐ எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வலியுறுத்தினார். காங்கிரஸ் சார்பாக பேசிய செல்வப்பெருந்தகை, இந்த சட்ட மசோதாவால் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் என்றார். தொழிற்சாலைகளை பாதுகாப்போடு, தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதால், இந்த சட்டத்தை தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

    First published:

    Tags: DMK, TN Assembly, Work