முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12 மணி நேர வேலை மசோதா: யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார் - அமைச்சர் சேகர்பாபு

12 மணி நேர வேலை மசோதா: யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார் - அமைச்சர் சேகர்பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

12 மணி நேர வேலை மசோதா குறித்து முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளைய தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் , அமைச்சர் அன்பரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக, முதலமைச்சர் சுமூக முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சேகர்பாபு, இவ்வாறு தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிட்டர் சோழா விடுதி அருகே திமுக சார்பாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிட்டர் சோழா விடுதியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை முன்னிட்டு விஸ்பா மற்றும் அப்ரில்லா ஆகிய இருசக்கர வாகன நிறுவனங்கள் நடத்தும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு , 12 மணி நேர வேலை மசோதா குறித்து முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளைய தினம் பொதுப்பணித்துறை அமைச்சர் , அமைச்சர் அன்பரன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கட்டாயம் வாசிக்க:  கூட்டணி கட்சிகள் இணைந்து 12 மணி நேர வேலை திட்டத்தை திரும்ப பெற முதல்வரிடம் வலியுறுத்துவோம் - திருமாவளவன்

இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் இந்த பிரச்சனையை சமூகமாக அனைத்து தரப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் முடிவுகள் முதல்வரின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் என கூறியதோடு இது தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார் எனவும் உறுதி அளித்தார்.

First published:

Tags: Minister Sekar Babu