முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக 100-ஐ கடந்த கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக 100-ஐ கடந்த கொரோனா தொற்று

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Corona Virus : தமிழ்நாட்டில் 79 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று 100-ஐ கடந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இதைடுத்து, தொற்று அறிகுறி உள்ளவர்களிடம் பரிசோதனையை மேற்கொள்வது அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 3,000 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் வெளிநாட்டில் இருந்த வந்த இருவர் உட்பட மொத்தம் 105 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தற்போது, 79 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுபாதிப்பு சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரித்துள்ள நிலையில், பெரம்பூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எஞ்சிய 35 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

First published:

Tags: Corona positive, Corona Symptoms, Tamil News