முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக-வில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி இன்று தொடக்கம்..!

திமுக-வில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி இன்று தொடக்கம்..!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தொடங்க உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக-வில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இன்று தொடங்கி வரும் ஜூன் 3ம் தேதி வரை "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் நடைபெறவுள்ள உறுப்பினர் சேர்க்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரு.வி.க., குடியிருப்பில் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை தொடங்க உள்ளனர்.

top videos

    மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 2 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திமுகவினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, மயிலாடுதுறையில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் வாரியாக உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்திய மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.

    First published:

    Tags: CM MK Stalin, DMK, MK Stalin, Politics, Tamil News