Virender Sehwag (வீரேந்திர சேவாக்)

    இந்திய கிரிக்கெட் அணியின் மான்ஸ்டர்; வீரேந்திர சேவாக் பற்றிய முழு விவரங்கள் இதோ!

    இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஓப்பனர், மான்ஸ்டர் என்றெல்லாம் புகழக்கூடிய முன்னாள் கிரிக்கெட் வீரேந்திர சேவாக் குறித்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்…

    நஜாப்கரின் நவாப் அல்லது நவீன கிரிக்கெட்டின் ஜென் மாஸ்டர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். சேவாக் ஆக்ரோஷமான வலது கை தொடக்க பேட்ஸ்மேன் மற்றும் வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் என அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்தவர்.

    பிறப்பு:

    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ‘வீரு’ என செல்லமாக அழைக்கப்படும் வீரேந்திர சேவாக் 1978ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி டெல்லியில் பிறந்தார். தீவிர கிரிக்கெட் பிரியரான சேவாக்கின் அப்பா அரிசி வியாபாரம் செய்து வந்துள்ளார். தனது மகன் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்பதற்காக, 7 மாத குழந்தையாக இருந்த போது வீரேந்திர சேவாக்கிற்கு அவரது அப்பா பிளாஸ்டிக் பேட் மற்றும் பந்தை பரிசாக கொடுத்துள்ளார். அதனை கட்டி அணைத்தபடி தான் குழந்தை சேவாக் தூங்கவே செய்வாராம். அந்த அளவிற்கு குழந்தையில் இருந்தே கிரிக்கெட் மீது சேவாக்கிற்கு தீராத காதல் பிறந்துள்ளது.

    டெல்லி அரோரா வித்யா பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கிய சேவாக் படிப்பில் சுமாராக இருந்தாலும், கிரிக்கெட்டில் கில்லியாக வலம் வந்துள்ளார். 1997ல் டெல்லி கிரிக்கெட் அணிக்குத் தேர்வானார். தேசிய முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பில் சேர்ந்த சேவாக் உள்ளூர் போட்டிகளில் சதம், இரட்டை சதம் என்று கலக்கியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அணியில் இடம் பிடித்த சேவாக் தென்னப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தனது முழு திறனையும் வெளிப்படுத்தினார்.

    இந்திய அணியில் அறிமுகம்:

    1999ம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களம் இறங்கியவர் ஒரு ரன்னோடு ஆட்டம் இழந்தார். பந்து வீச்சிலும் மூன்று ஓவருக்கு 35 ரன்கள் கொடுத்துள்ளார். இதனால் இவரை 20 மாதத்திற்கு இந்திய அணி கண்டுகொள்ளவில்லை.

    இந்திய அணியில் சரியாக விளையாட பயிற்சி எடுத்து வந்த வீரேந்திர சேவாக், துலிப் டிராபி, ரஞ்சி டிராபி போட்டிகளில் கவனம் ஈர்க்க ஆரம்பித்தார். இதனால் 20 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மார்ச் 2001ம் ஆண்டு ரீ- என்ட்ரி கொடுத்த சேவாக், ஜிம்பாபேவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியவர் 3 போட்டிகளிலும் சுமாராகவே விளையாடினார்.

    இதனால் இந்திய அணி மீண்டும் சேவாக் மீது அதிருப்தியில் இருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஆட்டத்தில் 54 பந்துகளில் 58 ரன்களையும், 3 வீக்கெட்களையும் வீழ்த்தினர். இதற்காக சேவாக்கிற்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் சேவாக்கை ஓபன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் அப்போதைய கேப்டன் கங்குலி. ஆகஸ்ட் 2001ம் ஆண்டு நடந்த போட்டியில் ஓபன் பேட்ஸ்மேனாக களமிறங்கி நூறு ரன்களைக் குவித்து கெத்து காட்டினார். அதன் பின்னர் சச்சின் – சேவாக் கூட்டணி ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்க ஆரம்பித்தது.

    நியூலாந்திற்கே சென்று நியூசிலாந்து முதன் முறையாக வெற்றிக்கோப்பையை தட்டி வந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 68 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்து சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

    ரன்களில் படைத்த சாதனைகள்:

    2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களையும், 2008-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ரன்களையும் எடுத்தார்.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 278 பந்துகளில் 300 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.

    2009ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில், 207 பந்துகளில் 250 ரன்களை அடித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 149 பந்துகளில் 219 ரன்கள் எடுதத்து இமாலய சாதனை படைத்துள்ளார். தனது ரோல் மாடலான சச்சினை விட ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தது, கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக மூன்று முறை முச்சதங்கள் அடித்தது என பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 முத்சதங்களுடன் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் டான் பிராட்மேனுடன் சேவாக் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    ஓபனராக கிரிக்கெட் விளையாட்டில் கெத்து காட்டினாலும், சர்வதேச அளவில் கேப்டன் சாதிக்க வீரேந்திர சேவாக்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தோனியை இல்லாத போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டாலும் வீரேந்திர சேவாக்கின் கேப்டன்சியும் பெரிதாக எடுபடவில்லை, ஐபிஎல் போட்டியிலும் அதே நிலை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

    வீரேந்திர சேவாக்கிற்கு கிடைத்த விருதுகள்:

    2002ம் ஆண்டு – அர்ஜூனா விருது
    2010ம் ஆண்டு – சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர் விருது
    2010ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது என இந்திய அளவில் புகழ் பெற்ற் சேவாக்.

    அடுத்தடுத்து 2008, 2009 என இரண்டு ஆண்டுகளில் விஸ்டர் விஸ்டன் லீடிங் என்ற இரண்டு கிரிக்கெட்டர் என்ற தலைசிறந்த விருதுகளைப் பெற்றுள்ளார்.

    குடும்ப வாழ்க்கை:

    சேவாக், ஆர்த்தி அஹ்லாவத் என்பவரை ஏப்ரல், 2004 இல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அக்டோபர் 18, 2007ம் ஆண்டு ஆர்யாவீர், 2010ம் ஆண்டு வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர்.