Suresh Raina (சுரேஷ் ரெய்னா)

  சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கை வரலாறு!

  இந்திய கிரிக்கெட் அணியின் மிக சிறந்த பீல்டர்களில் முக்கியமானவர் சுரேஷ் ரெய்னா: பேட்ஸ்மேன் மற்றும் பகுதி நேர பந்து வீச்சாளர் என முக்கிய ஆள் ரவுண்டராக வளம் வந்தவர். எப்போதும் துருதுருவென இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். அதிலும் பெண் ரசிகைகளை அதிகம் உடையவர். இந்திய அணி மட்டுமல்லாது ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் முக்கிய வீரர்களுள் ஒருவராக இருந்தவர். ரசிகர்களால் சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவின் வாழ்க்கையை பற்றி பார்ப்போம்.

  ஆரம்ப கால வாழ்க்கை:

  இவர் உத்திரபிரதேசத்தில் முரட் நகர் எனும் இடத்தில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் காஷ்மீர் பண்டிட் குடும்பம் ஆகும். தற்போது காசியாபாத்தில் வசித்து வரும் இவருக்கு தினேஷ் ரெய்னா, நரேஷ் ரெய்னா, முகேஷ் ரெய்னா என்று மூன்று சகோதரர்கள் உள்ளனர். மேலும் ரேணு எனும் மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார்.. சுரேஷ் ரெய்னாவின் தந்தை ட்ரைகோசந்த் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். ரெய்னாவிற்கு பிரியங்கா என்ற பெண்மணியுடன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்

  கிரிக்கெட் வாழ்க்கை:

  2000 ஆம் ஆண்டில் கிரிக்கெட் விளையாடிய துவங்கிய ரெய்னா தன்னுடைய சொந்த ஊரான முரட் நகரில் இருந்து காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லக்னோ என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டு கல்லூரியில் உடற்கல்வி பயின்றார். கிரிக்கெட்டில் மிக ஆர்வமாக இருந்த சுரேஷ் ரெய்னா உத்தரப்பிரதேச அணியின் அண்டர் 16 அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2002 ஆம் ஆண்டில் 15 வயதாக இருக்கும் பொழுது இந்திய அணியின் அண்டர் 19 இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்லும் இந்திய அணியில் தேர்வானார். அந்த போட்டியின் போது இரண்டு அரை சதங்களை விளாசி அசத்தினார். அதன் பிறகு ரஞ்சி கோப்பையில் 2003 ஆம் ஆண்டு விளையாடிய ரெய்னா அதே ஆண்டு அண்டர் 19 அணிக்கான ஒரு நாள் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியிலும் தேர்வுசெய்யப்பட்டார்

  சர்வதேச போட்டிகள்:

  உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சிறந்த பீல்டர்கள் வரிசையை எடுத்து பார்த்தால் அதி சுரேஷ் ரெய்னாவின் பெயர் கண்டிப்பாக இருக்கும். அந்த அளவிற்கு மைதானத்தில் மிக சுறுசுறுப்பாகவும் துரு துருவென இருக்கும் அவரை பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் கூடிய காலங்களும் உண்டு. இடதுகை பேட்ஸ்மேனாகவும், பகுதி நேர சுழல்பந்து வீச்சாளராகவும் செயல்பட்ட இவர், இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்தார்.

  2011ம் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியில் எப்பொழுதும் மிடில் ஆர்டரில் களமிறங்கும் ரெய்னா அன்றைய ஆட்டத்தில் இறுதிப் போட்டியில் டெயிலேண்டர்களுன் களம் இறங்கி முக்கியமான 36 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற தன்னுடைய பங்களிப்பை அளித்தார்.

  ஆனால் அதே ஆண்டு நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஏழு இன்னிங்க்ஸ்களில் மொத்தமாகவே வெறும் 27 ரன்கள் தான் எடுத்திருந்தார். அதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து மைதானங்கள் ஷார்ட் பாலுக்கு மிகவும் பிரபலமானவை. ரெய்னாவும் ஷாட்பால்களை ஆடுவதற்கு மிகவும் திணறிக் கொண்டிருந்தார். ரெய்னாவின் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுன்சர்களை வீசினால் போதும் என்ற நிலைமை வந்துவிட்டது. ரெய்னாவிற்கென்று எப்பொழுதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

  ஆனால் சில நேரங்களில் தன்னுடைய பிட்னஸ் காரணமாகவும் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினாலும் அணியில் இருந்து உள்ளே வருவதும் போவதுமாக இருந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த காலகட்டங்களில் ரெய்னாவிற்கு போட்டி கொடுக்கக்கூடிய பல வீரர்கள் வரிசையில் இருந்தனர். முக்கியமாக அவருக்கு பல விதங்களிலும் உறுதுணையாக இருந்த அவரது நெருங்கிய நண்பரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ரெய்னாவிற்கு முன்னர் கிடைத்தது போன்ற சலுகைகள் அணியில் கிடைக்கவில்லை.

  என்னதான் சர்வதேச போட்டியில் இந்திய அணிக்குள் வருவதும் போதுமாக இருந்தாலும் ஐபிஎல் போட்டி பொருத்தவரை எப்பொழுதும் அசைக்க முடியாத ஒருவராகவே இருந்தார். மிஸ்டர் ஐபிஎல் என்று பட்டத்தையும் வைத்திருந்தார். முக்கியமாக 2010 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக அவர் அடித்த அரைசதம் மும்பை அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தது.. 2014 ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில் வெறும் 25 பந்துகளில் 87 ரன்கள் எடுத்த கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளுத்து வாங்கினார். இன்று வரை ரெய்னாவின் அந்த இன்னிங்க்ஸ் பேசப்படும் ஒன்றாகவே உள்ளது.

  2016 ஆம் ஆண்டு பெட்டிங் புகாரில் சிக்கி சென்னை அணி இரண்டு வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட, குஜராத் என்ற புதிய அணியை உருவாக்கி அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். அவருக்கு மிக சிறப்பான காலகட்டமாகவும் அமைந்தது 15 போட்டிகளில் 399 ரன்கள் அடித்து அசத்தினார்.

  2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 16 கோடிகொடுத்து அவரை அணியில் தக்க வைத்து கொண்டது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்தத் தொடரில் நடந்த இரண்டாவது போட்டியில், காயம் ஏற்பட அதன் பிறகு சில போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். அதற்கு அடுத்த வருடம் 2019 ஆம் ஆண்டு பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் ஐந்தாயிரம் ரன்களை கடந்து, ஐபிஎல்-ல் 5000 கண்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் .

  2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி விளையாடுவதற்காக துபாய்க்கு சென்று சர்ச்சையில் சிக்கினார். அதில் தனக்கு பால்கனி உள்ள ஹோட்டல் ரூம் தான் வேண்டும் என்று கேட்க ஹோட்டல் நிர்வாகம் அதை மறுத்ததாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இதனை பெரிதாக எதுவும் கண்டு கொள்ளவில்லை எனவும் அதனால் சற்று மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் ஒரு நிரூபிக்கப்படாத செய்தி இன்று வரை பேசபடுகிறது. மேலும் அந்த தொடரில் இருந்து விலகி ரெய்னா மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப இந்த காரணத்தினால் தான் அவர் இந்தியா திரும்பினார் எனவும் பலவித செய்திகள் பரவின.

  ஆனால் 2021 ஆம் ஆண்டு மீண்டும் பணியில் அவர் தேர்வு செய்யப்பட அந்த புரளி சட்டென்று அடங்கி போனது. மேலும் 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடிய நான்காவது வீரர் என்று பெருமையும் பெற்றார். ஆனால் துரதிஷ்டவசமாக 2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரெய்னாவை வாங்குவதற்கு எந்த அணியும் முன் வரவில்லை. ஐபிஎல் தொடக்க காலத்தில் இருந்து ரெய்னாவை தக்க வைத்துக் கொண்டிருந்த சென்னை அணி அவரை தேர்ந்தெடுக்காததின் மூலம் ஏற்கனவே பேசப்பட்டு வந்த புரளி உண்மை என்பது போல் பல ஊடகங்கள் அவற்றை ஊதி பெரிதாக்கினார்கள். எனினும் அந்த ஆண்டு அவர் போட்டி வர்ணனையாளராக இருந்தார்.

  கேப்டன் தோனிக்கு அடுத்தபடியாக சின்னத்தல என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ரெய்னாவுக்கும் தோனிக்கும் மிக அழகிய நட்பு ஒன்று இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் விதமாக தோனி தனது ஓய்வை அறிவித்த அதே நாளான ஆகஸ்ட் 15 2020 ஆம் ஆண்டு ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.

  சாதனைகள்:

  சர்வதேச டி20 போட்டிகளில் 6000 கண்களைக் கடந்த முதல் வீரர் என்று பெருமையும் மொத்தமாக 8000 ரன்கள் கடந்தவர் என்று பெருமையும் பெற்றுள்ளார்

  ஐபிஎல் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்

  ஐபிஎல்லில் அதிக கேட்சுகளை பிடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்

  க்றிஸ் கெயிலுக்கு அடுத்து 100 சிக்ஸர்கள் அடித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். (17 கேட்சுகள்)

  சாம்பியன்ஸ் லீக் டி20 யின் அதிக ரன்கள் அடித்த வீரர் என்று பெருமையையும் பெற்றுள்ளார் (842 ரன்கள்)

  சாம்பியன்ஸ் லீக் டி20 வரலாற்றிலேயே அதிக அரை சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம்

  ஐபிஎல் மேட்சில் நடக்கும் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

  சொத்து மதிப்பு:

  இந்திய ரூபாயில் இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 185 கோடிக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது.