Smriti Irani (ஸ்மிருதி இரானி)

    தனி ஆளாய் நின்று தன்னை தானே செதுக்கி கொண்ட ஒரு பெண் அரசியல் தலைவரின் கதை!

    ஸ்மிரிதி இராணி என்ற பெயர் கொண்ட சாதாரரண பெண், வறுமையில் வாழும் ஒரு குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்து, தன்னுடைய நலனை தியாகம் செய்து அந்த குடும்பத்திற்காக உழைத்த ஒரு பெண்மணி, படி படியாக உயர்ந்து, இன்று மிக பெரும் சாதனைகளுக்கு உரியவராக மாறியுள்ளார். அப்படி அவர் கடந்து வந்த பாதைகளையும், வழியில் சந்தித்த சவால்களை பற்றியும் ஒரு ஆழமான அலசல்.

    பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை:

    இவர் 1976 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி புது டெல்லியில் பிறந்தார். இவருக்கு அஜய் மஹால் என்ற தந்தையும் ஷிவானி நீ பக்ஷி என்ற தாயும் உள்ளனர். இவரது தந்தை பஞ்சாபி மற்றும் மகாராஷ்டிரிய இந்து கலப்பு குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது தாய் ஒரு வங்காளி இந்து ஆவார். மொத்தம் மூன்று பெண் குழந்தைகளை கொண்ட இந்த குடும்பத்தில் ஸ்மிரிதி ராணி தான் மூத்தவர் ஆவார். இவரது குடும்பம் ஆரம்பத்திலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தது. இவரது தாத்தா ஆர்எஸ்எஸில் முக்கிய பொறுப்புகளிலும் இருந்து வந்துள்ளார். மேலும் இவரது தாயாரும் ஜன சங்க இயக்கத்தில் இருந்துள்ளார். இவரும் தன்னுடைய இளம் வயதிலேயே ஆர்எஸ்எஸ்-ல் தன்னை இணைத்துக் கொண்டு ஆர்வமுடன் செயல்பட்டார்.

    கல்வி:

    இவர் புதுடெல்லியில் உள்ள கத்தோலிக்க சபையினரால் நடத்தப்பட்ட ஹோலி சைல்ட் ஆக்சிலம் என்ற பள்ளியில் படித்தார். அதன் பிறகு புதுடெல்லியின் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.காம் பயின்றவர் முதலாமாண்டு தேர்வு மட்டுமே எழுதி பின்பு தனது படிப்பை கைவிட்டார்.

    திருமண வாழ்க்கை:

    தன்னுடைய குழந்தை பருவ நண்பரான ஜூபின் இராணி என்று தொழிலதிபருடன் 2001 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோகர் என்ற மகனும் ஜோயிஷ் என்ற மகனும் உள்ளனர். மேலும் அவரது கணவரின் முதல் மனைவியின் மகளான மோனா இராணியும் இவர்களுடன் வளர்ந்து வந்தார்.

    சினிமா வாழ்க்கை:

    இவர் சினிமா வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னரே பல்வேறு கஷ்டங்களையும் கடினமான பாதைகளையும் கடந்தே வந்துள்ளார். தன்னுடைய பள்ளிப்படிப்பின் போதே குடும்பத்தை சுமக்க ஆரம்பித்தவர் அழகு சாதன பொருட்களை ப்ரமோட் செய்யும் வேலையையும், மாடலிங் ஆகிய துறைகளிலும் வேலை செய்திருக்கிறார். ஆனால் உண்மையிலேயே அவருடைய அடி மனதில் அவருக்கு ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என்ற விருப்பம் தான் மேலோங்கி இருந்திருக்கிறது. இவர் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகுப் போட்டியிலும் பங்கேற்று இருக்கிறார். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு போலியன் என்ற ஆல்பத்தில் இடம்பெற்ற ஒரு ஹிந்தி பாடலில் “மிக்காஸிங்” என்ற இந்திய பாடகர் உடன் திரையில் தோன்றினார்.

    முதல் முறையாக ஸ்டார் பிளஸ்-ல் ஒளிபரப்பான ஒரு டிவி தொடரில் சின்ன திரையில் தோன்றி நடித்தார். இவை அல்லாமல் வேறு பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டின் இடைக்காலத்தில் ஸ்டார் பிளஸ் – ல் ஒளிபரப்பான ஒரு தொடரில் இவர் ஏற்று நடித்த துளசி என்ற கதாபாத்திரம், மக்களிடம் பெரும் அளவில் கொண்டு சேர்த்தது. அதில் இவர்தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐ டி ஏ சிறந்த நடிகைக்கான விருதை தொடர்ந்து ஐந்து முறை பெற்ற முதல் பெண்மணியும், இந்திய தெல்லி விருதுகளை தொடர்ந்து நான்கு முறையும் பெற்ற முதல் பெண்மணி என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

    அதன்பிறகு ஜீ டிவியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் சீதா கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடித்தார். 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடர் இவரை மேலும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மேலும் சில தொடர்களில் இவர் துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். விறுத் என்ற டிவி தொடரையும் சோனி டிவிக்காக தயாரித்து அதில் வசுதா என்று முன்னணி கதாபாத்திரத்தையும் ஏற்று நடத்துள்ளார். இது மட்டுமல்லாமல் மேலும் பல தொடர்களில் துணைக் கதாபாத்திரங்களையும் பல்வேறு தொடர்களை தயாரித்தும் வந்துள்ளார். 2012 அம்ரிதா என்ற வங்காள படத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.

    அரசியல் வாழ்க்கை:

    2033 – ல் பாரதிய ஜனதா கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட இவர் அதற்கு அடுத்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மகாராஷ்டிரா இளைஞர் அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெற இயலவில்லை. அந்த ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான இன்றைய பாஜக மிகப் பெரும் தோல்வியினை தழுவியது. இதற்காக கொந்தளித்த ஸ்மிருதி இராணி அப்போதைய குஜராத் முதலமைச்சரும் தற்போதைய இந்திய பிரதமருமான நரேந்திர மோடியை பலமாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த தோல்விக்கு பொறுப்பேற்று நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் எனவும் அவர் பதவி விலகும் வரை நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மோடிக்கே ஒரு பயத்தை ஏற்படுத்தினார்.

    2009 ஆம் ஆண்டு பாஜகவின் மத்திய குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 2000ம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயலாளராகவும் அனைத்திந்திய பாஜகவின் மகளிர் அணி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இல் ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் அமெத்தி தொகுதியில் போட்டியிட்ட இவர் 12 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 2019 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மோடியால் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பில் அமர்த்தபட்டார்.

    இவரின் கல்வி தகுதியை காரணம் காட்டி, அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவரின் உட்கட்சியிலேயே அந்த சமயத்தில் எழுந்தது. இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது. அதில் ஸ்மிரிதி இராணிக்கு ஜவுளித்துறை அமைச்சராக பதவி வழங்கப்பட்டது.

    மேலும் 2017 ஆம் ஆண்டு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கான கூடுதல் பொறுக்கும் இவருக்கு வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு மீண்டும் உத்தரப்பிரதேசத்தின் அமெத்தி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் ராகுல் காந்தியை வீழ்த்தி லோக்சபாவில் இடம் பிடித்தார். இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு சம்பவம் என பாஜகவினரால் பாராட்டப்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

    சொத்து மதிப்பு:

    மாத வருமானம் மற்றும் சம்பளம் ஆகியவை சேர்த்து 10 லட்சத்திற்கு அதிகமாக பெரும் இவர், 2019 ஆண்டின் படி நிகர சொத்து மதிப்பு 7.5 கோடி ஆகும்.