HOME » SILAMBARASAN

Silambarasan

  லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் திரையுலக பயணம்!

  சிலம்பரசன், தமிழ் திரைப்பட உலகில் பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்திரன் மற்றும் உஷா ராஜேந்திரன் அவர்களுக்கு மூத்த மகனாக பிப்ரவரி 3, 1983 அன்று பிறந்தார். இவரை பொதுவாக எஸ்டிஆர் அல்லது சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அழைப்பார்கள். இவர் சிறுவயதில் இருந்தே தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. சிம்புவுக்கு குறளரசன் என்னும் தமயனும், இலக்கியா என்ற சகோதிரியும் உள்ளனர்.

  இவர் 1984ல் உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இதை தொடர்ந்து 1986ல் மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்க வீட்டு வேலன், பெற்றெடுத்த பிள்ளை, சபாஷ் பாபு, ஒரு வசந்த கீதம், தாய் தங்கை பாசம், மோனிஷா என் மோனலிசா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

  தனது வெளிநாட்டு பயணத்திற்காக விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது அவரின் விண்ணப்ப படிவத்தில் பெயரை பார்த்த அதிகாரி கூறியதால் தனது பெயரை எஸ்டிஆர் என மாற்றிக்கொண்டார் எனவும் தெரிய வருகிறது.

  இதற்கு காரணம் MGR, N.T.R போலவே தனது பெயரும் மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் மாற்றியதாகவும் கூறியுள்ளார். இவர் விஜய டி ராஜேந்திரன் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தில் முதன்முறையாக நாயகனாக அறிமுகமானார். அதையடுத்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். சிலம்பாட்டம், காளை, வல்லவன், குத்து, சரவணா, தொட்டி ஜெயா, மன்மதன், கோவில், தம், அலை தொடங்கி தற்போது நடித்துள்ள ஈஸ்வரன் படம் வரை லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.

  இவர் நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படம் நகைச்சுவையுடன் கூடிய ஒரு கலகலப்பான படமாக அமைந்திருந்தது இந்த படத்தை அடுத்து சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் தனது உடல் எடையை குறைத்து பழைய சிம்புவை நாம் காணும் வகையிலும், ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும் இந்தப்படத்தில் எளிமையான தோற்றத்துடன் நடித்துள்ளார்.

  இவர் நடிகர் மட்டுமல்ல பாடகரும் கூட. இவர் பாடிய “எவண்டி உன்ன பெத்தான்”, “வேர் இஸ் தி பார்ட்டி”, “பொண்டாட்டி”, “லவ் பண்ணலாமா வேணாமா” போன்ற பாடல்கள் திரையுலகில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

  இவருக்கு 2006ம் ஆண்டு கலைமாமணி விருதை தமிழக அரசு வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலம்பாட்டம் படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும், சிறந்த நடனக் கலைஞருக்கான விருதையும் இசையருவி தமிழ் மியூசிக் விருதுகள் 2009ம் ஆண்டில் இவருக்கு வழங்கியுள்ளது.

  2010ம் ஆண்டில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை எடிசன் விருது அமைப்பு குழு இவருக்கு வழங்கியுள்ளது

  2011ம் ஆண்டு வெளியான வானம் படத்திற்காக ஐடிஃப்எ குழு சார்பில் சிறந்த நடிகருக்கான விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

  2012 ல் “ஸ்டைலிஷ் ஸ்டார் ஆப் சவுத் சினிமா” எனப்படும் சர்வதேச தமிழ்நாடு திரைப்பட விருதான சீமா விருதையும், 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை எடிசன் விருது அமைப்பு குழு இவருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

  இவர் அழகாக நடனமாட கூடியவர். இவர் நடன திறமையால் தான் நடித்த பல படங்களில் குறிப்பாக மன்மதன் படத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் எனவும் கூறலாம். இவர் சமீபத்தில் நடித்த மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற பெயரில் அறிமுகம் ஆகி இருப்பார். இந்த படம் ஜாலியாகவும் அடிதடி காட்சிகளுடனும் மக்கள் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு படமாக அமைந்தது.

  சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு வெற்றியை அடுத்து புதிதாக வெந்து தணிந்தது காடுஎன்ற படத்தில் நடித்து வருகிறார் எனவும் தற்போது இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  தனது சிறு வயதில் இருந்து திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் சிறுசிறு தடைகளை சந்தித்தாலும் தற்போது வரை எஸ் டி ஆர் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு மக்கள் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.