Shikhar Dhawan (ஷிகர் தவான்)

  இந்திய அணியின் “கப்பார்” எனப்படும் ஷிகார் தவானை பற்றிய சிறு அலசல்!

  இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் “கப்பார்” என அன்பாக அழைக்கப்படுபவர் ஷிகர் தவான். மொட்டை தலையும் முறுக்கு மீசையும் இவரின் முத்திரை அடையாளங்கள். இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக யாரை விளையாட வைப்பது என்ற குழப்பம் மேலோங்கி நின்ற காலங்களில் அப்போதைய இந்திய கேப்டன் தோனியின் தேர்வாக சஷிகார் தவான் இந்திய அணியில் தேர்வாகி துவக்க ஆட்டகாரராக விளையாடி பல சாதனைகளை செய்துள்ளார். அப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஷிகார் தவானின் வாழ்க்கை வரலாறை பற்றி இப்போது பார்ப்போம்.

  ஆரம்ப கால வாழ்க்கை:

  ஷிகர் தவான் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி டெல்லியில் பிறந்தார். இவரது தந்தை பெயர் மகேந்திர பால் தவான் மற்றும் தாயின் பெயர் சுனேனா தவான் ஆகும். இவருக்கு ஸ்ரேயா எனும் இளைய சகோதரியும் இருக்கிறார். தன்னுடைய உயர்நிலைப் பள்ளிக் கல்வியை டெல்லியில் உள்ள புனித மார்க் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியில் முடித்த பின்பு தன்னுடைய 12 ஆம் வயதில் கிரிக்கெட் கிளப்பில் இணைந்து கொண்டார் அங்கு அனுபவிக்க பயிற்சியாளரான தரச் செங்காவிடம் பயிற்சி பெற்றார் இந்த தரம் சிங்கர் ஏற்கனவே 12 சர்வதேச பேட்ஸ்மேன்களை தன்னுடைய சிறந்த பயிற்சியின் மூலம் உருவாக்கியுள்ளார். இவருக்கு 2012 ஆம் ஆண்டு மெல்போர்னை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்த ஆயிஷா முகர்ஜி தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆவார். மேலும் ஷிகார் தவானைவிட விட 12 வயது மூத்தவர்.

  கிரிக்கெட் வாழ்க்கை:

  அனைத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களை போலவே தவானும் உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்துஅதன் மூலம் தேசிய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன் முதலில் டெல்லி அணிக்காக 1999 ஆம் ஆண்டு “விஜய் ஹசாரே கோப்பை” உள்ளூர் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் சேர்த்தார். அதற்கு அடுத்த வருடமும் அதுபோலவே சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தார்.

  அந்தத் தொடரில் டெல்லி அணி கோப்பை வெல்லவில்லை என்றாலும் ரன்னர் அப் என்ற இடத்தை பெற்றது. அதன் பின் வரிசையாக பல்வேறு உள்ளூர் தொடரில் பங்கேற்ற அதிக ரன்கள் சேர்த்தார். ஆனால் தவான் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அதற்கு முக்கிய காரணம் தவான் உள்ளூர் போட்டிகளில் நிலையாக ஆடவில்லை சில போட்டிகளில் சொதப்பியும் சில போட்டிகளில் நன்றாக விளையாடியும் வந்ததால் உள்ளே வெளியே என்ற நிலைமை தான் எப்போதும் இருந்தது.

  2010 அக்டோபர் மாதம் இந்திய அணிக்காக “செகண்ட் ஸ்ட்ரிங்” என அழைக்கப்பட்ட புதிய அணியை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடுவதற்கு தேர்வு செய்தனர். அதில் தவானும் தேர்வு செய்யப்பட்டார். முக்கியமாக அப்போதே இந்திய கேப்டன் டோனி தவானை அணியில் சேர்த்துக்கொள்ள முனைப்பு காட்டினார். அதற்கு காரணம் தோனியும் தவானும் ஏற்கனவே உள்ளூர் தொடரில் பல போட்டிகளில் இணைந்து விளையாடி அதிக ரன்கள் சேர்த்துள்ளனர். தவானின் திறமையை பற்றி தோனிக்கு நன்கு தெரியும். எப்படியோ கடைசியாக தன்னை இந்திய அணியில் தன்னை நிரூபிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

  விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தவான் தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியை விளையாடினார். ஆனால் இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அனைத்து எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியிலும் அவரால் சரியாக ரன் அடிக்க முடியவில்லை. இதனால் மீண்டும் உள்ளூர் போட்டிக்கு திரும்பி ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய தவான் 2012-13 ஆண்டுகளில் ரஞ்சிப் போட்டியில் 400 ரன்களுக்கும் மேல் அடித்து மீண்டும் இந்திய அணி தேர்வாளர்களின் பார்வையை தன் மீது திரும்ப செய்தார்.

  இதனால் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் தவான் சேர்க்கப்பட்டார். அப்போது வீரேந்திர சேவாகும் முரளி விஜயும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் வீரேந்திர சேவா சரியான ஃபார்மில் இல்லாத காரணத்தினால் அவர் நீக்கப்பட்டு மூன்றாவது போட்டியில் ஷிகார் தவானுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. சச்சின் டெண்டுல்கர் தவானுக்கு வாழ்த்து கூறி இந்திய டெஸ்ட் தொப்பியை பரிசளிக்க தைரியத்துடன் தவான் களத்தில் இறங்கினார். இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை விடுவதற்கு தவான் தயாராக இல்லை. அந்தப் போட்டியில் 85 பந்துகளில் சதம் அடித்த தவான் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்த போட்டியின் இறுதியில் 174 பந்துகளில் 187 ரன்கள் அடித்து தவான் தனது விக்கெட்டை இழந்தார்.

  இதனால் தவான் குஷியானாரோ இல்லையோ இந்திய கேப்டன் தோனி படு குஷி.. இந்திய அணிக்கு சிறந்த துவக்க ஜோடி கிடைத்துவிட்டது என சந்தோஷப்பட்ட தோனி அதுவரை மிடில் ஆர்டரில் ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மாவையும், ஷிகார் தவானையும் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கினார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு இந்த ஜோடி தான் இந்திய அணியின் துவக்க ஜோடியாக வலம் வந்தது. 2014 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான சதத்தை பதிவு செய்தார். அந்தத் தொடரில் வெறும் ஐந்து போட்டிகளில் 360 க்கும் மேல் ரன்கள் அடித்து மிகச் சிறந்த ஒரு சராசரியை வைத்திருந்தார். மேலும் கோல்டன் பேட் விருதைப் பற்றி அதுமட்டுமல்லாமல் அந்த தொடருக்கான சிறந்த வீரர் என்று விருதையும் பெற்றார்.

  ஆனால் அதன் பிறகு தவானின் வழக்கமான கெட்ட நேரம் அவரை துரத்த துவங்கியது. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடப்பதற்கு முன்பு வரை அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்ததால் ஏகப்பட்ட கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகினார். ஆனால் கேப்டன் தோனியின் விருப்பத்தின் பெயரில் விருப்பத்தின் 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை அணியில் ஷிகார் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த தொடரில் திரும்பவும் தென்னாப்பிரிக்கா அணி முதல் போட்டியில் இந்தியாவுடன் மல்லுக்கட்டி நிற்க தவானுக்கு மிகவும் பிடித்தமான தென்னாப்பிரிக்கா அணியை வெளுத்து வாங்கிநார். தொடரின் முதல் போட்டியிலேயே சதம் அடித்தார்.

  அதன் பின் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 300 ரன்களுக்கும் மேல் எடுக்க அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் தவான் அதிரடி துவக்கம் கொடுத்து 113 பங்குகளில் 126 ரன்கள் எடுத்து அசத்தினார். தவான் களத்தில் இருந்தவரை இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தனது விக்கெட்டை இழக்க அதன் பின்வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சீட்டுக்கட்டை போல் சரிந்தனர். 2018 ஆம் ஆண்டு நிடாஸ் கோப்பை போட்டியில் 90 ரன் அடித்து சர்வதேச டி20 போட்டியில் தன்னுடைய அதிகப்பற்ற ஸ்கோரை பதிவு செய்தார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்தார்

  தவானுக்கு ஒரு நாள் போட்டிகளும் டி20 போட்டிகளும் விளையாட வந்த அளவுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக விளையாட முடியவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு டி20 போட்டிகளிலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார். அவரின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது அவருடைய ஃபார்ம் தான். சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். அதன் பிறகு பல போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாவார். இந்த நிலைத்தன்மை இல்லாத காரணத்தினால் தான் இந்திய அணியில் தவானின் இடம் உள்ளே வெளியே என்று இப்போதுவரை இருந்து வருகிறது.

  சர்வதேச போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகளில் வெளுத்து கட்டும் தவான் 2013 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். 2019 ஆம் ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் -ல் ஐந்தாயிரம் ரண்களைக் கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் அணியால் 8.25 கோடிக்கு வாங்கப்பட்ட தவான், ஏப்ரல் மாதம் சென்னை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தனது 200வது ஐபிஎல் போட்டியை விளையாடினார் அது மட்டுமல்லாமல் அந்த போட்டியில் 6000 ரன்களை கடந்து விராட் கோலிக்கு பிறகு 6000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

  சொத்து மதிப்பு:

  ஷிகர் தவானின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 15 கோடிக்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அவரின் பெருமளவு வருமானம் கிரிக்கெட் மூலம் பெறுகிறார்.