கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு!
தொன்னூறுகளில் வாழ்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மிக பரீட்சயமான பெயர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் இவர் பேட்டிகள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து மிகுந்த சிரத்தையுடன் விளையாடி, கிரிக்கெட்டில் உச்சத்தை எய்தியவர். சதத்தில் சதம் அடித்த இவரின் சாதனையை முறியடித்து இன்னும் எவராலும் முடியவில்லை. லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் ப்ளாஸ்டர் என பல பட்ட பெயர்கள் உடைய சச்சினின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்.
ஆரம்பகால வாழ்க்கை:
சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மராத்திய புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரின் தாயும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். நடுத்தர குடும்பத்தில் நான்காவது குழந்தையாக சச்சின் டெண்டுல்கர் பிறந்தார். சிறுவயதில் எப்பொழுதும் துருதுருத்வென குறும்புக்காரராக இருந்த சச்சினை அவரது தந்தை, ரமாகாந்த் அச்ரேக்கர் என்ற கிரிக்கெட் பயிற்சியாளரிடம், கிரிக்கெட் பயிற்சிக்காக அனுப்பி வைத்தார். மும்பை சிவாஜி பூங்காவில் கிரிக்கெட் பயிற்சிக்காக சேர்ந்த சச்சினுக்கு ஆரம்பத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லை என்றாலும் அந்த விளையாட்டை கற்றுக் கொள்வதில் அவர் எந்த குறையும் வைக்கவில்லை.
மேலும் கிரிக்கெட்டை மிக எளிதாக கற்றுக் கொண்ட அவர், அங்குள்ள மற்ற மாணவர்களை விட சிறந்தவராக இருந்தார். இதற்கு எடுத்துக்காட்டாக சில நேரங்களில் அவரது பயிற்சியாளர் ஸ்டம்புகளின் மேல் ஒரு ரூபாயை வைத்து, சச்சின் விக்கெட்டை வீழ்த்துபவர்களுக்கு அந்த ஒரு ரூபாய் கிடைக்கும் என்று கூறுவார். எத்தனையோ பவுலர்கள் முயற்சி செய்தாலும் யாராலும் சச்சினை வீழ்த்த முடியாது கடைசியில் அந்த ஒரு ரூபாய் சச்சின் தான் எடுத்து செல்வார் என்று சொல்லப்படுவதுண்டு. சச்சினின் பேட்டிங் திறமையை பற்றி சொல்வதற்கு இந்த சம்பவத்தை எடுத்துக்காட்டாக கூறுவார்கள். காலப்போக்கில் படிப்பை விடவும் கிரிக்கெட் சச்சினை முழுவதுமாக ஆட்கொண்டது.
உள்ளூர் கிரிக்கெட்:
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வெறித்தனமாக விளையாடிய சச்சின், மும்பை வான்கடே மைதானத்தில் அப்போதைய சிறந்த பந்துவீச்சாளராக இருந்த கபில்தேவின் பந்துவீச்சனை மிக எளிதாக விளையாடிய சச்சின் பேட்டிங் திறமையை கண்ட மும்பையின் மாநில தலைவரான திலீப் சர்க்கார் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சச்சினை தேர்வு செய்தார். 1988 – 89ம் ஆண்டுகளில் நடந்த ரஞ்சிப் போட்டியில் சச்சின் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.
சர்வதேச இந்தியா அணி:
1989 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சச்சின் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட சச்சினுக்கு அப்பொழுது வயது பெறும் 16 தான். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த தொடரில் சச்சின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் பெஷாவரியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் 18 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அனைவரையும் அலற வைத்தார். அதில் ஒரே ஊரில் 27 ரன்கள் எடுத்து எதிரணியை கலங்கடித்தார். அதன் பின்னர் இந்திய அணியின் மிக மிக முக்கிய பேட்ஸ்மனாக சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்தார்.
அடுத்த 24 வருடங்களும் இந்திய கிரிக்கெட் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் தான் நிறைந்து இருந்தார் மிக அதிகமான ரசிகர் பட்டாளம் சச்சினுக்கு உருவாகியது. சச்சின் செய்த சாதனைகள் அனைத்திலும் முக்கியமான ஒரு சாதனை சதத்தில் சதம் அடித்தது ஆகும். டெஸ்ட் போட்டிகளில் 51 சதமும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் என சேர்த்து மொத்தம் 100 சதங்களை அடித்துள்ளார். தன்னுடைய நூறாவது சதத்தை 2012ம் ஆண்டு வங்காள தேசத்தை அணிக்கு எதிரான போட்டியில் அடித்தார்.
பல்வேறு சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி காலம் வரை உலகம் கோப்பை வெல்வது என்பது எட்டாத கனியாகவே இருந்து வந்தது. ஆனால் 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை வென்று சாதனை படைத்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால ஆசையும் நிறைவேறியது.
இன்று வரையும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார். 1989 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட துவங்கிய சச்சின் டெண்டுல்கர் 2012 ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் மும்பை அணியின் சார்பாக விளையாடி வந்தார். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று மொத்தமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
சாதனைகள்:
தன்னுடைய 24 வருடக் கிரிக்கெட் வாழ்க்கையில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் 5,921 ரன்களை எடுத்துள்ளார். மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 463 போட்டிகளில் விளையாடி 18,426 ரன்கள் சேர்த்துள்ளார். நூறு சதங்களை அடித்த இவரின் சாதனை இன்றளவும் எவராலும் முறியடிக்க முடியாத ஒன்றாகவும், மிக மிக கடினமான ஒன்றாகவும் இருந்து வருகிறது. இது ஒன்றே சச்சின் யார் என்பதை மற்றவர்களுக்கு பறைசாற்றும்.
விருதுகள்:
கிரிக்கெட்டில் சச்சின் செய்த சாதனைகளுக்காக அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்ம விபூஷன் விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார். மேலும் ராஜ்ய சபாவின் எம் பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
சொத்து மதிப்பு:
உலக கிரிக்கெட்டில் மிக முக்கிய பேட்ஸ்மேன் ஆக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களின் ஒருவராக அறியப்பட்டவர். இவரின் மொத்த சொத்து மதிப்பு 1270 கோடிக்கு மேல் கணக்கிடப்பட்டுள்ளது.