ப்ரோ-கபடி (புரோ கபடி) புரொபஷனல் கபடி லீக். இது 2014 இல் தொடங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், ஆசிய விளையாட்டு மற்றும் ஐபிஎல் ஆகியவற்றின் வெற்றியின் அடிப்படையில் ப்ரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டது. கபடி லீக் (Pro Kabaddi League) தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ப்ரோ கபடி லீக் முதல் சீசனில், 8 அணிகள் இறங்கின. தற்போது அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 8-வது சீசன் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, இம்மாதம் 22-ம்தேதி தொடங்கவிருக்கிறது. ப்ரோ கபடி லீக்கின் முதல் சீசனை 43.5 கோடிப் பேர் பார்த்துள்ளனர். இதிலிருந்து, இந்த போட்டிகளுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பு நாம் புரிந்து கொள்ளலாம்.