20 ஆண்டுகளுக்கு மேல் ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்தஸ்தஸ்தோடு வலம் வரும் நவீன் பட்நாயக்!
தந்தையின் மறைவிற்குப் பின்னர் அரசியலில் களம் இறங்கியிருந்தாலும் தன்னுடைய சாமர்த்திய திறமையால் மக்கள் செல்வாக்கைப் பெற்று 20 ஆண்டுகளாக ஒரிசா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து வருகிறார் நவீன் பட்நாயக்.
இளமைக்காலத்தில் பெரும்பாலான நாள்களில் புத்தகம் எழுதும் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தன்னுடைய மறைவிற்குப் பிறகு அரசியலில் கால்பதித்து ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சராக மக்களுக்கானப் பணிகளைச் செம்மையாக செய்து வருகிறார் நவீன் பட்நாயக். ஊழல் இல்லாத நல்லாட்சியை அமைப்பதற்காக மற்ற கட்சிகளுடன் முரண்பாடுகளைச் சந்தித்து முன்னேறிவரும் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் இளமைக்காலம், அரசியல் வாழ்க்கை குறித்த சில பதிவுகள் இங்கே…..
இளமைப்பருவம்:
ஒரிசாவின் கட்டாக் நகரில் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக் மற்றும்கியான் பட்நாயக்கிற்கு கடந்த 1946, அக்டோபர் 16 ல் பிறந்தார் நவீன் பட்நாயக். தன்னுடைய 7 வயதில் தேராதூன் நகரில் வெல்ஃகாம் சிறுவர் பள்ளியில் சேர்ந்தாார். பின்னர் அங்குள்ள புகழ்பெற்ற டூன் பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார். 17 வயதில் சீனியர் கேம்பிரிட்ஜ் சான்றிதழ் பட்டம் பெற்ற நவீன் பட்நாயக், தில்லிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக் முன்னாள் முதல்வராக மட்டுமில்லாமல், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் விமானியாக இருந்தார். இந்தியா, இந்தோனேசியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சிக்கலில் சந்தித்தப்போது தன்னுடைய பணியைத் திறம்பட செய்தார். இதன் விளைவு தான் பிஜு பட்நாயக் இறந்தப்பிறகு இந்த 3 நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தன்னுடைய இளமைக்காலத்தில் பெரும்பான்மையான நாள்களை புத்தகங்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய இவர், தந்தையின் இறப்பிற்குப் பிறகு நவீன் பட்நாயக்கிற்கு அரசியலில் கால் பதிக்கும் சூழல் ஏற்பட்டது.
நவீன் பட்நாயக் அரசியல் பயணம்…
தந்தை பிஜூ பட்நாயக் இருக்கும் வரை அரசியல் பக்கமே தலைக்காட்டாமல் ஒதுங்கியிருந்த நவீன் பட்நாயக், தந்தையின் மறைவிற்குப் பின்னர் பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். பிஜூ பட்நாயக்கின் மகன் என்ற பெயரைத் தவிர அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் பயணத்தைத் தொடங்கினார். தன்னுடைய அண்ணன் பாரதீய ஜனதா கட்சியில் இருந்தாலும் ஜனதா தளம் சார்பில் கடந்த 1996ல் அஸ்கா தொகுதியில் போட்டியிட்டு 11 வது மக்களவைத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 1997 ல் ஜனதா தளத்திலிருந்து பிரிந்த அவர், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் கட்சியை எந்த நிலைக்குக் கொண்டு செல்லப்போகிறார்? என்ற அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டது. இருந்தப்போதும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தன்னுடைய பணியை மேற்கொண்டார். இதனையடுத்து பாரதீய ஜனதா கட்சி தலைமையேற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மத்திய அமைச்சகத்தில் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
2000ல் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய இவர், கூட்டணி ஆட்சியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலற்ற மற்றும் ஏழைகளோடு நலம் தரும் திட்டங்களை செயல்படுத்தி வாக்காளர்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றார். இந்த செல்வாக்கே நவீன் பட்நாயக்கை ஒடிசா மாநிலத்தில் தற்போது வரை தொடர்ந்து 5 முறை முதல்வராக பதவி வகிக்க வைத்துள்ளது. நவீன் பட்நாயக் தன்னுடைய ஆட்சியல் தந்தையைப் போலவே தவறிழைக்கும் அதிகாரிகளைக் கண்டறிந்து மாநில அரசின் வளர்ச்சிக்கு துணைபுரிந்து வருகிறார்.
மாநில வளர்ச்சியில் நவீன் பட்நாயக்…
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய மற்றும் கல்வி வளர்ச்சி குறைவான மாநிலமாக உள்ளது ஒரிசா. நவீன் பட்நாயக் முதல்வராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வரும் நிலையில், ஒரிசாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தவர்களின் எண்ணிக்கைப் படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் 63 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்த நிலையில், தற்போது 29 சதவீதமாக குறைந்திருக்கிறது. மேலும் இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலத்தில் வளர்ச்சிப்பணிகளைத் திறம்பட செய்து மக்களைப் பாதுகாக்கும் முதல்வராக வலம் வருகிறார்.
மாநில மொழியே தெரியாத முதல்வர்….
ஒரு மாநிலத்தை சரியான வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் அந்த மாநில மொழிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபித்துக்காட்டியவர் நவீன் பட்நாயக். ஆரம்பத்தில் ஒடியா மொழியே தெரியாத இவர், தேர்தல் பிரச்சார சமயங்களில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துப்பேசி மக்களின் செல்வாக்கைப் பெற்றார்.
அரசியலில் வருவதற்கு முன்னதாக கலை இலக்கியங்கள் அதீத ஈடுபாடு கொண்டிருந்த ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், A second paradise : Indian country life 1590: 1947, A Desert Kingdom: The people of Bikaner, Garden of life: An introduction to the Healing plants of india உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மாநில மொழி தான் சரியாகத் தெரியாது ஆனால் மேற்கத்திய நடையில் ஆங்கிலம் பேசும் திறன் கொண்டவர் தான் நவீன் பட்நாயக்.