Manmohan Singh (மன்மோகன் சிங்)

  “மன்மோகன் சிங்” என்னும் நிறைகுடம் கடந்து வந்த பாதை!

  இன்றைய காலத்து 2k கிட்சுக்கு எப்படியோ தெரியவில்லை. ஆனால் அனைத்து 90ஸ் கிட்ஸ்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒருவர், மிகவும் பரிச்சயமான ஒருவர் இந்தியாவில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.

  மிகவும் சாந்தமான முகம், தெளிவான பேச்சு, தெளிவான திட்டமிடல் ஆகியவை மூலம் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர், அரசியல்வாதி, பொருளாதார மேதை என பல முகத்தை கொண்டவர். இது நாள் வரைக்கும் பொதுவெளியில் கோபப்பட்டு அதிர்ந்து பேசியோ, மற்றவரை கடிந்து கொண்டோ யாரும் அவரை பார்த்ததில்லை. குணத்தில் மட்டுமல்லாமல் கல்வித் தகுதியிலும் அவர் நிறைகுடம் ஆகத்தான் திகழ்ந்தார். தன்னுடைய திறமையைப் பற்றி எப்போதுமே தற்பெருமை பேசியதே கிடையாது இதுபோன்ற காரணங்களினாலோ என்னவோ அவர் எப்போதுமே மக்கள் மனதில் நீங்காமல் ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

  ஆரம்ப கால வாழ்க்கை:

  இவர் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் “கா” என்னும் ஊரில் பிறந்தார் தற்போது அந்த ஊரானது பாகிஸ்தானின் எல்லைக்குள் சேர்ந்து விட்டது. குருமூக் சிங் மற்றும் அம்ரித் கபூர் என்னும் சீக்கிய தம்பதியருக்கு இவர் பிறந்தார். துரதிஷ்டவசமாக இவர் பிறந்த சில காலங்களிலேயே அவரது தாயார் காலமாகிவிட்டார். அதன் பிறகு தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் வளர துவங்கியவர் தன் பாட்டியிடம் மிக நெருக்கமாகவும் அன்புடனும் வளர்ந்தார்

  கல்வி:

  தன்னுடைய இளம் வயதிலேயே படிப்பில் மிகவும் கெட்டிக்காரராக திகழ்ந்தார். பள்ளியில் உருது வழியில் பயின்ற இவர் அந்த மொழியில் வல்லவராக திகழ்ந்தார். தன்னுடைய இந்தி மொழியில் பேச வேண்டிய பேச்சுகளையும் உருது மொழியில் எழுதி அவற்றை மேடையில் பேசினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலத்தில் அவரது குடும்பம் தற்போதைய இந்தியாவின் அம்ரித்சர் எனும் இடத்திற்கு குடி பெயர்ந்தது. அங்குள்ள இந்து கல்லூரியில் பொருளாதார துறை குறித்து படித்த அவர் பயின்ற அவர் தன்னுடைய இளங்கலை 1952 – லும் முதுகலை படிப்பை 1954 லும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார்.

  தன்னுடைய புத்தி கூர்மையினாலும் அசாதாரணமான கற்கும் திறன் நாளும் அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இவருக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. 1957ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான கௌரவ பட்டத்தை பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவிலேயே மேல் படிப்பை தொடர்ந்த அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டத்தை பெற்றார்

  ஆற்றிய பணிகள்:

  அமெரிக்காவில் கல்வியை முடித்த பிறகு இந்தியாவிற்கு திரும்பிய அவர் 1966 லிருந்து 1969 வரை வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றினார். அவரின் அறிவுக் கூர்மை மற்றும் பொருளாதாரத்தில் அவருக்கு இருந்த அறிவாற்றல் ஆகியவற்றின் காரணமாக டெல்லி பொருளாதார பள்ளி மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக அவர் பணியாற்றினார்.

  1971 இல் இருந்து 72 வரையிலான காலகட்டத்தில் இந்திய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். 1972 லிருந்து 76 வரை இந்திய அரசின் முதன்மை பொருளியல் ஆய்வுரைஞராகவும் புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றினார். இவரின் அயராத உழைப்பும் வேலையில் அவர் காட்டிய சிரத்தையும் அவரை இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனராக அமர வைத்தது 1976 முதல் 1980 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனராகவும் இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் இயக்குனராகவும், நிதி அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.

  1982 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி-யால் பணியமர்த்தப்பட்டார். 1985 லிருந்து 1987 வரை இந்திய திட்டப்பணி ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். அவரின் இந்த பணி அனுபவம் மற்றும் செயல்பாடுகளின் மூலம் இந்தியப் பிரதமரின் ஆலோசகராக செயல்படும் அளவிற்கு அவரை உயர்த்தியது. 1990ல் இருந்து 91 வரை இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக அவர் விளங்கினார்.

  மேலும் 1991 ஆம் ஆண்டு யு பி எஸ் சி யின் தலைவராகவும் யுஜிசி-யின் தலைவராகவும் செயல்பட்டார்.

  அரசியல் பிரவேசம்:

  அவர் தன்னுடைய முதல் அரசியல் பிரவேசத்தை 1991 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். இந்திய பிரதமர் ஆன திரு.நரசிம்மராவ் இவரின் அறிவையும் அனுபவத்தையும் நம்பி இவரை அப்போதைய இந்தியாவின் நிதி அமைச்சராக பணியமர்த்தினார். இது “மன்மோகன் சிங்” பொற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு இந்தியா மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது நிதி அமைச்சராக பொறுப்பேற்ற மண்மோகன் சிங் தன்னுடைய அனுபவத்தினால் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்தியாவின் பொருளாதாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக தலை நிமிர்த்தினார் 1991 முதல் 96 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். மக்களவையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் எனும் சிறப்பும் இவருக்கு உண்டு. 1999 இல் தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவரை பாஜக வேட்பாளர் ஒருவர் தோற்கடித்தார் 1998 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார்.

  இந்தியாவின் பிரதமர்:

  2004 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான பாஜகவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்குவதாக அறிவித்தார். சுதந்திர இந்தியாவின் முதல் இந்து மதத்தை சாராதவரும் சீக்கிய மதத்தை சார்ந்த ஒருவர் பிரதமராவது இதுவே முதல் முறை. தன்னுடைய ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தினார். மேலும் அண்டை நாடுகளான பாகிஸ்தானுடன் நட்புறவை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார்.

  இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்திக் கொண்டு வணிக ரீதியாகவும் பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியானது மீண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்குவதாக அறிவித்தது. இதன் மூலம் 2004 முதல் 2014 வரை இரண்டு முறை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக திகழ்ந்தார். 2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்து அவர் விலகிக் கொண்டார்.

  முக்கிய விருதுகள் மற்றும் சாதனைகள்:

  1987- பத்மவிபூஷன் விருது

  1993- சிறந்த நிதி அமைச்சருக்கான விருது

  1994- சிறந்த நிதி அமைச்சருக்கான விருது

  1997- லோக்மன்யா திலக் விருது

  1999- ஹெச் எச் காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் விருது.