HOME » KULDEEP YADAV

Kuldeep Yadav (குல்தீப் யாதவ்)

  மந்திர சுழல் மாயாஜால சைனாமேன் குல்தீப் யாதவ்!

  தன்னுடைய பந்து வீச்சை தூண்டில் போல பயன்படுத்தி, தூண்டிலில் இருக்கும் புழுவை போல பந்தை மிக லாவகமாக வீச, அதை கண்ட பேட்ஸ்மேன்கள் அந்த பந்தை அடிக்க வந்து மிக எளிதாக இவரது தூண்டிலில், சிக்கி தனது விக்கெட்டை இழந்துள்ளனர். இப்படி தான் குல்தீப் யாதவின் பந்து வீச்சு இருக்கும். பார்ப்பதற்கு மிக எளிதாக அடித்துவிடலாம் என்ற எண்ணத்தை கொடுத்து, அவ்வாறு அடிக்க செல்லும்போது அப்படியே அதற்கு நேர் மாறான பக்கம் திரும்பி சென்றுவிடும். ரிஸ்ட் ஸ்பின் எனப்படும் மணிக்கட்டை சுழற்றி வீசும் பந்து வீசில் கெட்டிக்காரரான இவர் இந்தியாவின் முதல் சைனாமேன் மந்துவீச்சாளராகவும் அறியப்படுகிறார்.

  பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை:

  குல்தீப் யாதவ் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உத்தர பிரதேசத்தின், உண்ணாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். அதன் பிறகு அவரது குடும்பம் கான்பூர் என்ற ஊருக்கு குடி பெயர்ந்தது. குல்தீப்பின் தந்தைக்கு சொந்தமாக செங்கல் சூலை உள்ளது. மேலும் இவருக்கு ஒரு சகோதரியும் உள்ளனர்.
  குல்தீப் யாதவ் இதுவரை யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

  கிரிக்கெட் வாழ்க்கை:

  உண்மையில் குல்தீப்பை கிரிக்கெட் விளையாட அதிகமாக ஊக்கப்படுத்தியது அவரது தந்தை தான். இவருடைய தந்தை தான் முதன் முதலில் குல்தீப்பை கிரிக்கெட் பயிற்சிக்கு சென்று சேர்த்தார் குல்தீப்பிற்கு ஆரம்பம் முதலே வாசிம் அக்ரம், மற்றும் ஜாகீர் கான் ஆகிய பந்துவீச்சாளர்களின் மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. சுழற்பந்துவீச்சை மிகுந்த ஆர்வமுடன் இருந்த குல்தீபிற்கு அவரது பயிற்சியாளர் கபில் தேவ் பாண்டே உதவ குல்தீப் மெல்ல மெல்ல சுழல் பந்துவீச்சில் கைத்தேறினார். தன்னுடைய பயிற்சியாளரிடமிருந்து முறையாக சுழல் பந்துவீச்சை கற்றுக் கொண்ட அவர் அவருக்கே தெரியாமல் சில மேஜிக்கல் மொமென்ட்களை விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்தினார்.

  பந்தை திருப்பும் முறையும், அவரது பந்து வீசும் திறனும் மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து சற்று மாறுபட்டு இருப்பதையும், அதுதான் குல்தீப்பின் மிகப்பெரும் பலம் என்பதையும் முதன் முதலில் அவரது பயிற்சியாளர் கபில் பாண்டே தான் கண்டுபிடித்தார். இதன் பிறகு குல்தீப்பிற்கு ஷேன் வார்னவின் மீது ஈர்ப்பு வந்து அவரை தன்னுடைய ரோல் மாடலாக எடுத்துக் கொண்டார். ஷேன் வார்னேவின் பல வீடியோக்களை பார்த்து பார்த்து தன்னுடைய சுழல் பந்துவீச்சை இன்னும் திறமையாக வீச கற்றுக் கொண்டார்.

  உள்ளூர் கிரிக்கெட்

  2012 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் முதன்முதலாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக குல்தீப் யாதவ் ஒப்பந்தமானார். ஆனால்அந்த போட்டியில் அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பிறகு 2014 ஆம் ஆண்டில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். அதே 2014 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பை காண போட்டியில் ஹாட்ரிக் சாதனை செய்தது மட்டுமல்லாமல், அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் வரிசையில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் அண்டர் 19 உலக கோப்பையில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார்.

  இவரது மணிக்கட்டு சூழல் பந்துவீச்சு எப்போதும் ஒருவித மாயாஜாலத்தினை நிகழ்த்துகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர். அத்தொடரில் 17 வெட்டுகளை வெறும் மூன்று போட்டிகளில் வீழ்த்தி அவரது அணியை அந்தத் தொடரின் இறுதிக்கு கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தார். மற்ற வீரர்களோடு ஒப்பிடும்போது உண்மையிலேயே குல்தீப்பிற்கு அவரை நிரூபிப்பதற்கு தேவையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.. 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை அணியிலிருந்து கழட்டி விட்டது. ஆனால் அதே அணி 2018 ஆம் ஆண்டு ஐ பி எல் போட்டியில் குல்தீப் யாதவை மறுபடியும் வாங்கிக் கொண்டது. 2022 ஐ பி எல் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார்

  சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை 2014 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிகளுக்கு எதிரான போட்டியில் சர்வதேச இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் போட்டியில் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு அப்போது ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்பார்த்ததைப் போல் அந்த போட்டியில் களமிறங்கவில்லை. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த போட்டியிலும் அவர் மைதானத்தில் இறங்கி விளையாடவில்லை. கடைசியாக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் களத்தில் இறங்கி விளையாடுவதற்கு குல்தீப்பிர்கிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

  அப்போட்டியில் மிகச் சிறப்பாக வந்து விஷயங்களை நெஞ்சில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய பந்துவீச்சை நிரூபித்தார். இந்தியாவின் டெஸ்ட் அணிக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களில் இடது கை மணிக்கட்டு சுழல் வகையில் வந்து பேசும் முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றார். தன்னுடைய முதல் பேஸ் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் மணிக்கட்டு சூழல் பந்துவீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார்.

  அதன் பிறகு தன்னுடைய முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியை மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு விளையாட்டினார். ஆனால் துரதிஷ்டவசமாக அப்போட்டியின் போது மழை குறுக்கிட்டு அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியையும் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக ஆகஸ்டு 2017 ஆம் ஆண்டு விளையாடினார்.

  அதன் பிறகு இந்தியாவிற்காக பல ஒரு நாள் போட்டிகளில் விளையாடி தன்னுடைய மந்திர சூழல் வித்தை மூலம் பல விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் முக்கியமாக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இரண்டு ஹாட்ரிக் சாதனைகளை செய்தார். இதன் மூலம் ஒரே போட்டியில் இரண்டு ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

  குல்தீப் யாதவை பற்றிய சில முக்கிய தகவல்கள்:

  அண்டர் 15 அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று நினைத்திருந்த வேளையில், இவர் அந்த அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் கிட்டத்தட்ட தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியினால் வாங்கப்பட்டு இருந்தாலும் ஒரு போட்டியில் கூட இவர் விளையாடவில்லை. 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதன்முதலாக களம் இறங்கி விளையாடிய குல்தீப், இந்தியாவின் சார்பாக களமிறங்கிய முதல் சைனாமேன் வகை பந்துவீச்சாளர் என்று பெருமையும் பெற்றார். இவர் களமிறங்கிய 2017 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி இவரோடு சேர்த்து மொத்தம் 28 சர்வதேச வீரர்கள் தான் சைனாமேன் வகை பந்துகளை வீசக்கூடிய திறனை பெற்றிருந்தனர்.

  சொத்து மதிப்பு:

  2020 ஆம் ஆண்டின் நிலவரத்தின்படி குறித்து குல்தீப்பின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 25 கோடி. இவரது மொத்த சொத்தும் இவர் கிரிக்கெட் விளையாடி வந்த பணத்தில் சேர்த்தது ஆகும்.