HOME » KRISHNA JAYANTHI

Krishna Jayanthi

    கிருஷ்ண ஜெயந்தி – வழிபாடு, வரலாறு, கொண்டாடும் முறை!

    கிருஷ்ண ஜெயந்தி என்பது இந்தியா முழுவதும் கொண்டாட கூடிய முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நன்னாளில் பகவான் கிருஷ்ணர் அவதாரம் பெற்றார். இவர் அஷ்டமி திதியில் எட்டாவது குழந்தையாக பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். கிருஷ்ணர் அவதாரம் பெற்ற இந்த நன்னாளை தான் இந்தியா முழுக்க உள்ள ஹிந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையாக கொண்டாடகின்றனர்.

    வழிபாடு

    குறிப்பாக ஹிந்துக்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளை சுத்தம் செய்தும், பல வித அலங்காரங்களை தயார் செய்தும் கொண்டாடுவார்கள். மேலும் தங்களின் வீடுகளில் உள்ள குழந்தைகளை வைத்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்காரம் செய்வார்கள். கிருஷ்னர் சிறு வயதில் பல வித லீலைகளை செய்ததை நினைவூட்டும் விதமாக இருக்க வேண்டும் என்பதாலே பாதங்களை வரைந்து கொண்டாடுகின்றனர். வீடுகளில் மட்டுமன்றி கோவில்களுக்கு சென்றும் கிருஷ்ண பகவானை வழிபாடு செய்வார்கள்.

    வரலாறு

    கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவதற்கு ஒரு முக்கிய வரலாறு உள்ளது. பகவான் கிருஷ்ணனின் அவதாரம் நிகழ்ந்ததன் காரணமாக தான் நாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறோம் என்பதை கதைகள் மூலமாக நாம் அறிந்திருப்போம். ஆனால், எதற்காக பகவான் கிருஷ்ணர் இந்த அவதாரத்தை எடுத்தார் என்பது பற்றி தெரியுமா? இந்த அவதாரத்திற்கு முக்கிய காரணமே அரக்க குணம் கொண்ட கம்சன் என்கிற அரசன் தான். மதுரா நகரில் தேவகி மற்றும் வாசுதேவருக்கு எட்டாவது மகனாக கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார்.

    இவரின் பிரபு என்பது சிறைச்சாலையில் நிகழ்ந்த ஒன்றாக இருந்தது. கம்சன் தனது எட்டாவது குழந்தையையும் கொன்று விடுவான் என்று பயந்து கொண்டு கிருஷ்ணரை ஆற்றில் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் கிருஷ்ணர் வளர்க்கப்பட்டார். பல தீங்குகளை செய்து வந்த தனது தாய் மாமனான கம்சனை வதம் செய்து துவாரகையில் அரசாட்சி செய்தார். கம்சனை அழிக்கவே இந்த அவதாரத்தை மகாவிஷ்ணு எடுத்தாக சில புராணங்கள் கூறுகின்றன. அதே போன்று குருச்சேத்திர போரில் கவுரவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக கிருஷ்ணர் அவதாரம் எடுத்ததாகவும் சில புராணங்கள் கூறுகின்றன.

    பகவத் கீதை

    இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் ‘பகவத் கீதை’ பிறந்த கதைக்கும் கிருஷ்னருக்கும் அதிக ஒற்றுமை உண்டு. பாரதப் போரில் பாண்டவர்களுக்கு துணையாக நின்றும், போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக இருந்ததும் கிருஷ்ணர் தான். தேரோட்டியாக வந்த கண்ணன், அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகளை தான் புனித நூலான பகவத் கீதையாக நாம் கொண்டாடி வருகிறோம். கிருஷ்ண ஜெயந்தியின் போது பலரும் பகவத் கீதை நூலை வாங்குவதும், அதை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிப்பதுமாக இன்றைய காலத்தில் ஒரு பழக்கம் உருவாகியும் உள்ளது.

    கிருஷ்ணர் பாதம்

    கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளை அலங்காரம் மக்கள் கிருஷ்ணரின் பாதங்களை தங்களது வீடுகளில் வரைந்து அழகு பார்ப்பார்கள். மேலும், வீட்டின் நுழைவாயிலில் குழந்தை நடந்து வந்தது போன்ற பாதச்சுவட்டினை மாவால் பதியச் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி கிருஷ்ணர் பாதத்தை வரைந்து கொண்டாடுவதால் கிருஷ்ணரே தங்களது வீட்டிற்கு வருகை தந்து என்று கருதப்படுகிறதாம். இது மட்டுமன்றி கிருஷ்ணரின் சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்து, அதில் துளசி மாலையையும் அணிவித்து வழிபாடு செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

    அலங்காரம்

    கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே இந்த நாளின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீடுகளை சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கிறோம். இது மட்டுமல்லாம் வாசலில் தொடங்கி பூஜை அறை வரை கிருஷ்ணரின் கால் பாதத்தை அரிசி மாவால் பதியா செய்கிறோம்.

    மேலும், இவற்றுடன் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த தயிர், வெண்ணை, அவல் ஆகியவற்றை வைத்து படைப்பது கிருஷ்னருக்கு மிகவும் விருப்பமான படையலாக கருதப்படுகிறது. சிலர் கிருஷ்ண ஜெயந்தி அன்று சீடை, முருக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளையும் வைத்து படைப்பார்கள். கிருஷ்ண ஜெயந்தி அன்று மாலை 6.00 – 7.00 மணிக்குள் பூஜை செய்வது சிறப்பு. இது பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது ஐதீகம்.