தீபத் திருநாள் என்பது கார்த்திகை மாத பவுர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும் கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள் ஆகும். குறிப்பாக திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வு சிறப்பானது. பொதுமக்கள் ஏராளமானோர் திருவண்ணாமலைக்கு நேரில் சென்று வழிபடுவர்.