HOME » JASPRIT BUMRAH

Jasprit Bumrah (ஜஸ்பிரித் பும்ரா)

  புல்லட் வேகத்தில் பந்து வீசும்” பூம் பூம் பும்ரா”!

  இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றிலேயே தன்னுடைய பந்து வீச்சும் ஸ்டைலிலே அனைவரையும் வியந்து பார்க்க வைத்த வீரர்களில் முதலில் இருப்பது ஜாஸ்பிரித் பும்ரா தான். சராசரியாக 130 கி.மீ வேகத்திற்கு மேல் வீசும் இவரது பந்து வீசினை சமாளிக்க லெஜென்டரி பேட்ஸ்மேன்களே சிரமப்பட்டனர். தனது அணி தோற்றுவிடும் என அனைவரும் கவலையோடு இருக்க கடைசி ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி வெற்றியைதேடி கொடுத்துள்ளார். இவரது வாழ்க்கை பற்றிய சிறிய அலசல் இதோ!

  பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை:

  இயற்பெயர்: ஜாஸ்பிரித் ஜாஸ்பர் சிங் பும்ரா.

  இவர் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் பிறந்தார். ஜஸ்பர் சிங் என்ற தந்தையும், தல்ஜித் கவுர் என்ற தாயும் உள்ளனர். இவருக்கு ஜுஹிகா பும்ரா என்ற சகோதரியும் உள்ளார் அகமதாபாத்தில் உள்ள நிர்மல் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இவருடைய தாய் ஒரு பள்ளியின் முதல்வர் ஆகவும் அவரது சகோதரி ஆசிரியராகவும் வேலை பார்த்து வந்தனர்.

  திருமண வாழ்க்கை:

  இவர் இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசன் என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

  கிரிக்கெட் ஆர்வம்:

  இவர் இளம் வயது முதலில் கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்து வந்துள்ளார். இவர் முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு குஜராத் அணியின் சார்பாக விதர்பா அணிக்கு எதிராக உள்ளூர் போட்டியில் களம் இறங்கினார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு வித்தியாசமான பவுலிங் ஆக்ஷனை வைத்திருந்தார் அது எதிரணி பேட்ஸ்மன்களால் அவ்வளவு சீக்கிரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு பிடிபடவில்லை. அவரின் பந்துவீச்சு எந்த வகையானது என்பதை கணிக்க முடியாமல் இருந்தது குஜராத்தில் இருந்து ஒரு சிறுவன் இப்படிப்பட்ட வேகத்தில் தனக்கென தனி பவுலிங் ஆக்ஷன் உடன் பந்து வீசுவது இவரை தனித்துவமாக காண்பித்தது.

  இந்த போட்டிதான் இவரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி, இவரது வாழ்வின் ஒரு திருப்பு முனையாக இருந்தது. இது மட்டுமல்லாமல் பல்வேறு உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்ற அவர் தன்னுடைய திறமையால் வெகு விரைவிலேயே சையத் “முஸ்டாக்” அலி கோப்பை விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் குஜராத் அணி கோப்பை வென்றது மட்டுமல்லாமல் ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார் அதில் வெறும் 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

  ஐபிஎல் ஆட்டம்:

  டி20 போட்டிக்கான அனைத்து தகுதிகளுடனும் உடல் வலிமையோடும் இருந்தார். மிகத் திறமையான பந்துவீச்சும் இவரை ipl நிர்வாகிகளின் அடையாளம் கண்ட கொண்டனர். இவருக்கு 19 வயதாக இருக்கும் போது முதன்முறையாக ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை பெற்றார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013 ஆம் ஆண்டு களமிறங்கி, தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடினார். இவரின் திறமையான பந்து வீச்சை பார்த்த மும்பை அணி இவரை 2014 ஆம் ஆண்டுக்கான ஏலத்தின் போது அணியில் தக்க வைத்துக் கொண்டது.

  சர்வதேச போட்டிகள்:

  ஐபிஎல் இல் தன்னுடைய வெற்றிகரமான பந்துவீசச்சினால், அனைவரையும் கவர்ந்த இவர் மிக சீக்கிரத்திலேயே சர்வதேச போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அத்தொடரில் இவர் மொத்தம் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

  2017 ஆம் ஆண்டு இந்தியாவின் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இவர் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். விரைவிலேயே இவருக்கு உலக கோப்பை அணியிலும் இடம் கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் 50 ஓவர் உலகக் கோப்பை அணியில் இவர் இடம் பெற்றார். 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தன்னுடைய நூறாவது ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய நூறாவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் முகமது ஷமி-க்கு அடுத்து மிக விரைவாக நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

  அதன் பிறகு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்ட இவர், தற்போது வரை இந்தியாவின் அசைக்க முடியாத, ஆட்டத்தை மாற்ற கூடிய ஒரு வேகப்பந்து வீச்சாளராகவும், மேட்ச் வின்னராகவும் செயல்பட்டு வருகிறார். இது மட்டுமல்லாமல் இவர் சில நேரங்களில் ஆல் ரவுண்டராகவும் கலக்குவார். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி ஆஸ்திரேலியா தொடரின் போது இவர் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய அணி தடுமாறும் போதெல்லாம் யாரும் எதிர்பாராத வண்ணம் கடைசி நேரத்தில் இவர் இறங்கி அடிக்கும் அதிரடியாக அடிக்கும் சில ரன்கள் பல்வேறு நேரங்களில் அணிக்கு கை கொடுத்துள்ளது. மேலும் ஐபிஎல் இன் கிங்காக இவர் அறியப்படுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்ற தொடர்களில் எல்லாம் இவருடைய பந்துவீச்சு அற்புதமானதாக இருந்துள்ளது. அணி தோற்றுவிடும் என்ற அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் வேளையில் கடைசி நேரத்தில் தன்னுடைய சாதுரியமான வேகப்பந்து வீச்சால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை உடையவர்.

  பும்ராவின் பற்றிய சில தகவல்கள்:

  இவருக்கு புகை பிடித்தல் மது அருந்துவது போன்ற எந்த கெட்ட பழக்கங்களும் கிடையாது. இவர் ஏழு வயதாக இருந்தபோதே இவரது தந்தை இறந்து விட்டார். தன்னுடைய வித்தியாசமான பந்துவீசும் ஆக்ஷனினால் பேட்ஸ்மன்களை திணறடிக்க செய்பவர். தன்னுடைய முதல் போட்டியை தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத் அணிக்காக விளையாடினார். தனக்கு யார்கர் வகை பந்தை வீச இலங்கையின் லெஜென்டரி வேகப்பந்துவீச்சாளர் சொல்லிக் கொடுத்தார் என்பதை தெரிவித்துள்ளார். இவரது பந்து வீசும வேகத்தை பார்த்து ” பூம் பூம் பும்ரா” என்ற அடைமொழியில் ரசிகர் கள் இவரை அன்பாக அழைக்கின்றனர்.

  சொத்து மதிப்பு:

  2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு 15 லட்சமும் ஒரு நாள் போட்டிகளுக்கு ஆறு லட்சமும் டி20 போட்டிகளுக்கு 3 லட்சமும் மற்றும் ஐபிஎல் தொடரில் ஏழு கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுகிறார்

  இவரது சொத்து மதிப்பு 55 கோடி ஆகும் வருடத்திற்கு 12 கோடிக்கும் அதிகமாக வருமானம் பெறுகிறார்.