Independence Day

  சுதந்திர தின கொண்டாட்டத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

  ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று, இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, சுதந்திர நாடாக இந்தியா மாறியதைக் குறிக்கிறது. சுதந்திர தினம் என்பது தேசிய தினமாகும். சுதந்திர தின கொண்டாட்டங்கள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கோலாகலமாக நடைபெறும். இந்தியப் பிரதமர் டெல்லியில், செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அதை தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு மற்றும் களை நிகழ்சிகள் நடைபெறும்.

  பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக பல சுதந்திரப் போராளிகள் செய்த தியாகங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

  பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஜூலை 4, 1947 அன்று இந்திய சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது. அது அடுத்த பதினைந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது. இதுவே இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற செயல்பாட்டின் முக்கிய பகுதியாகும். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், ராணி லக்ஷ்மி பாய் போன்ற சுதந்திரப் போராளிகள் மற்றும் தேசபக்தர்கள் மற்றும் பலர் சுதந்திரத்தை பெற வேண்டும் என்ற தீவிரமான முனைப்போடும், நம்பிக்கையோடும், உறுதியாகவும் நாட்டு மக்களை வழிநடத்துகிறார்கள்.

  ஆகஸ்ட் 15, 1947 அன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் பெற்றது.

  சுதந்திர தினத்தின் வரலாறு :

  இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் 1857ல் மீரட்டில் சிப்பாய் கலகத்துடன் தொடங்கியது மற்றும் அது முதல் உலகப் போருக்குப் பிறகு தீவிரமானது. 20ம் நூற்றாண்டில், மகாத்மா காந்தியின் தலைமையில், இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் பிற அரசியல் அமைப்புகள் நாடு தழுவிய சுதந்திர இயக்கத்தைத் தொடங்கி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கின.

  1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது, ​​ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரக்கோரி இந்திய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது.

  1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின் போது, ​​பல்வேறு வன்முறை கலவரங்கள், பொதுமக்கள் உயிரிழப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர்.

  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மற்றும் முதல் உரை :

  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், பண்டிட் ஜவஹர்லால் நேரு. “நள்ளிரவு நேரத்தில், உலகம் தூங்கும் போது, ​​இந்தியா வாழ்விலும் சுதந்திரத்திலும் விழித்தெழும்.” என்று இந்தியா சுதந்திரம் பெற்றதை பெருமிதமாக கூறியுள்ளார் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. நாட்டின் பிரதமாராக பொறுப்பேற்ற உடன், தனது முதல் உரையில் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் இவை.

  தேசத் தந்தை மகாத்மா காந்திஜி

  ஆங்கிலேயருக்கு எதிராக நீண்ட போராட்டத்தை நடத்திய பிறகு, காலனித்துவத்தின் பிடியில் இருந்து இந்தியா விடுபட பல இயக்கங்கள் தோன்றின. பல ஆண்டுகளுக்கு நீண்ட போராட்டத்தில், அடிமைத்தனத்தில் இருந்து நாட்டை மீட்க,பல புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்கள் தோன்றினர். அவர்களில், மிகவும் முக்கியமானவர், காலம் உள்ள வரை பேசப்படுபவர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார். அகிம்சை வழியில் சுதந்திர இந்தியாவுக்காக போராடியவர், ‘தேசத்தின் தந்தை’ என்று கௌரவிக்கப்பட்டார். .

  சுதந்திர தின ஏற்பாடுகள் மற்றும் டெல்லியில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டம் :

  பழைய டெல்லியில் உள்ள செங்கோட்டை வரலாற்று நினைவுச்சின்னத்தில் கொடியேற்றும் விழாவில் பிரதமர் பங்கேற்ற பிறகு, முப்படைகள் மற்றும் காவல்துறையினருடன் அணிவகுப்பு நடைபெறுகிறது. பின்னர் பிரதமர் நாட்டுக்கு தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துகிறார், ஒவ்வொரு ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டில் இந்தியாவின் முக்கிய சாதனைகளை பற்றி விவரித்து, எதிர்கால சவால்கள் மற்றும் இலக்குகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பார். பலவிதமான அளவுகள், வடிவங்கள் மற்றும் வண்ணங்கள் கொண்ட பட்டாம்பூச்சிகள் வானத்தை நிரப்பிக்கொண்டு, பட்டம் பறக்கவிடுவதும் சுதந்திர தினத்தின் பாரம்பரியமாகி விட்டது.

  சுதந்திர தினம் அன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொடி ஏற்றும் விழாக்கள், அணிவகுப்புகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிலையங்களில் கொடி ஏற்றப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

  குறிப்பாக, சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள், ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விவாதங்கள், மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

  அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் என்று அரசு நிறுவனங்கள் மற்றும் சேவைகள் மட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் இயங்காது. இந்தியா முழுவதும் தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.