Harmanpreet Kaur (ஹர்மன்ப்ரீத் கவுர்)

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பரீத் கவுரின் வாழ்க்கை வரலாறு!

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக களமிறங்கி தன்னுடைய நிரூபித்து, தற்போது அனைத்து வித போட்டிகளிலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கலக்கி வருகிறார் ஹர்மன்பரீத் கவுர். அவர் எவ்வாறு தன்னுடைய கிர்க்கெட் வாழ்க்கையை தொடங்கினார், என்னென்ன சாதனைகளை சஐதார் என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

    ஆரம்பகால வாழ்க்கை:

    ஹர்மன்பிரீத் கவுர் 1989 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள மொகா என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் ஹர்மிந்தர்சிங் புல்லார் மற்றும் தாயின் பெயர் சத்விந்தர் கவுர். இவர் தந்தை கைப்பந்து மற்றும் கூடை பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார். ஹர்மன்பரீத்கவுருக்கு ஹெம்ஜீத் என்ற இளைய சகோதரியும் உண்டு. ஹெம்ஜீத் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்று, மொகாவில் உள்ள குருநானக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஹர்மன்பரீத் கவுருக்கு ஆரம்ப காலத்தில் கிரிக்கெட்டில் அவ்வளவாக நாட்டமில்லை.

    ஜியன் ஜோதி ஸ்கூல் அகாடமியில் சேர்ந்து பிறகு தான் கிரிக்கெட்டில் அவருக்கு ஆர்வம் அதிகரித்தது. இந்த அகாடமி ஹர்மன் பிரீத்தின் வீட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு கமல்தீஷ் சிங் சோதி என்ற பயிற்சியாளர் இவருக்கு பயிற்சி அளித்தார். அந்த காலகட்டங்களில் அடிக்கடி ஆண்களுடன் சேர்ந்து கொண்டு கிரிக்கெட் விளையாடுவாராம். 2014 இல் மும்பைக்கு குடிப்பெயர்ந்த ஹர்மன்ப்ரீத் இந்திய ரயில்வேயில் பணிபுரிந்தார். இவருக்கு வீரேந்தர் சேவாக் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

    இவரின் தந்தை தற்போது நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார்.

    கிரிக்கெட் வாழ்க்கை:

    இவர் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனக்கு 20 வயது இருக்கும் போது, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். மேலும் ஒரு கேட்சும் பிடித்து அசத்தினார். ஜூன் 2009 இல் 2009 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியை விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியை விளையாடிய அவரால் துரதிர்ஷ்ட வசமாக வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்த முடிந்தது.

    ஆனால் தன்னுடைய அதிரடியாக ஆடக்கூடிய திறமையினால் 2019 இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் அதிவிரைவாக 33 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதன் பின்பு 2012 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தான் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் மகளிரணியை வீழ்த்தி ஆசியக் கோப்பை வென்றார்.

    மார்ச் 2013 இந்திய மகளிர் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்த போட்டியில்தான் அவர் ஒரு நாள் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான அந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினார்.

    2016 ஆம் ஆண்டு மிகப் பிரபலமான தொடர்பான பிக் பாஸ் லீக்கில், சிட்னி ஸ்கார்ச்சர்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம் பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.

    2017 ஆம் ஆண்டில் மிக தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை பெற்று பாதைக்கு கொண்டு சென்றார். 2022 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி அப்போதைய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் ஓய்வை அறிவிக்க, அடுத்த கேப்டன் பதவி ஹர்மன்ப்ரீத் கவுருக்கு அளிக்கப்பட்டது. தற்போது வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

    2010 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில காவல் துறையில் சேருவதற்கு இவர் அளித்த விண்ணப்பத்தை அரசாங்கம் கேலி செய்து நிராகரித்தது. அதன் பின்பு மூன்று வருடங்கள் கழித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை செய்ததின் அடிப்படையில் மும்பை ரயில்வேயில் இவருக்கு வேலை கிடைத்தது.

    2017 ஆம் ஆண்டு இவரின் சாதனைகளை பாராட்டி, அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    சொத்து மதிப்பு :

    இவரின் சம்பளம் சராசரியாக மாதத்திற்கு 15 லட்சம் வரை இருக்கலாம் என்றும், வருடத்திற்கு ஒன்றரை கோடி வரை இருக்கலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஹர்மன்ப்ரீத் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு 23 கோடிகள் ஆகும்.