‘எதிரிக்கும் அன்பு செய்’, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு’ என அன்பின் வலிமை போதித்த இயேசு, மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ மதத்தின் நம்பிக்கை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கொண்டாடப்படுகிறது.
புனித வெள்ளி வரலாறு:
எளிமையாகச் சொன்னால், புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் நாள். இந்த நாளில், பைபிளின் படி, யூத மதத் தலைவர்கள்-கடவுளின் மகன் மற்றும் யூதர்களின் ராஜா என அழைக்கப்பட்ட இயேசு மீது பல பொய் புகார்களை அடுக்கினர். அதற்கு காரணம் பெருநோயால் பாடுபட்டவர்களையும், கண் தெரியாதவர்களையும், நடக்கவே முடியாதவர்களையும் இயேசு தானே குணப்படுத்தினார். அத்துடன் பல நோயாளிகளையும் குணப்படுத்தி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். இதனால் ஆலயங்களை வணிகமாக நடத்தி வந்த யூதர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வளர ஆரம்பித்தது, அவர் போதித்த அன்பு வழியை மக்கள் பின்பற்ற ஆரம்பித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த யூதர்களின் பொய் குற்றச்சாட்டுக்கு அப்போதைய அரசரும் செவி சாய்ந்தார். இதன் விளைவாக கிறிஸ்துவிற்கு தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. வெறுப்பு மிக்க யூத ஆன்மீகவாதிகள் காவலர்களுக்கு இயேசுவை அடையாளம் காட்டுவதற்காக, அவரது 12 சீடர்களில் ஒருவரான யூதாசுக்கு 30 வெள்ளிக்காசுகளை கொடுத்து விலைக்கு வாங்கினர். கெத்சமெனித் தோட்டத்திற்கு காவலர்களுடன் சென்ற யூதாஸ், போதகரான இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார்
அடுத்த நாள் காலை, தேசத்தை சீர்குலைத்து, சீசருக்கு வரி செலுத்த மறுத்து, தன்னை ஒரு ராஜாவாகக் கூறிக்கொண்டதாக இயேசு ரோமானிய கவர்னர் பொன்டியஸ் பிலாட்டிடம் கொண்டு வரப்பட்டார். பிலாத்து இயேசுவிடம் விசாரித்து, மரண தண்டனை நியாயமானதல்ல என்று சபைக்கு அறிவித்தார். இயேசு கலிலேயாவிலிருந்து வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிலாத்து, அவரை கலிலேயாவின் ஆட்சியாளரான ஏரோது மன்னனிடம் ஒப்படைத்தார்.
ஏரோது சபைக்கு கொண்டு வரப்பட்ட இயேசுவிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் கர்த்தரிடம் இருந்து எவ்வித பதிலும் வரைவில்லை. இருப்பினும், இயேசுவை குற்றவாளியாக கருத முடியாத காரணத்தால் சவுக்கடி தண்டனையை மட்டும் அறிவித்த ஏரோது, மீண்டும் பிலாத்துவிடமே இயேசுவை திரும்பி அனுப்பினார்.
யூதர்களை பகைத்துக்கொள்ள விரும்பாத பிலாத்து, இயேசு கிறிஸ்துவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இயேசுவுக்கு மரண தண்டனை விதித்ததை அடுத்து, முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிலுவை சுமக்கச் செய்து, கல்வாரி மலையின் உச்சியில் கர்த்தராகிய இயேசு பிரானின் கால்கள் மற்றும் கைகளின் மணிக்கட்டுகளில் அணி அடித்து, சாகும் வரை சிலுவையில் அறையப்பட்டார்.
வெள்ளிக்கிழமை நல்ல உச்சி வெயில் வேளையில் இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டார். இந்த துயர தினத்தில் உலகமே இருளில் மூழ்கியதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. உலக மக்களுக்காக இயேசு அனுபவித்த துன்பங்களையும், தியாகங்களையும் நினைவு கூறவே, அவர் சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாக கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புனித வெள்ளி என அழைக்கப்படுவது ஏன்?
சோகமான மற்றும் துக்கமான நாளாக இருந்தாலும் ஏன் புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது என்ற விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஜெர்மனியில் புனித வெள்ளி என்பது கோட்டஸ் ஃப்ரீடாக் (Karfreitag) அல்லது “Sorrowful Friday” என்பதாகும். புனித வெள்ளியின் தோற்றம் ஆங்கில வார்த்தையான “கடவுளின் வெள்ளி” என்று பலராலும் நம்பப்படுகிறது.
1885 முதல் 1960கள் வரையிலான அமெரிக்க கத்தோலிக்கப் பள்ளியின் நிலையான பால்டிமோர் கேடசிசத்தின் படி, “கிறிஸ்து மனிதன் மீது மிகுந்த அன்பைக் காட்டினார், மேலும் அவனுக்காக ஆசீர்வாதங்களை வழங்கினார்” எனவே புனித வெள்ளி என அழைப்பது சரியானது எனத் தெரிவித்தது.
இந்த நாளில், கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகங்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட விதம், அவரது துன்பங்கள், அவர் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் அவர் அனுபவித்த வேதனையான மரணத்தை கிறிஸ்துவர்கள் நினைவு கூறுகின்றனர். இந்த துக்கமான நாளைத் தொடர்ந்து கொண்டாட்டமான ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. இந்நாள் இயேசு கிறிஸ்து மரித்து 3வது நாள் உயிர்த்தெழுந்த தினத்தை குறிக்கிறது.
புனித வெள்ளி எவ்வாறு அனுசரிக்கப்படுகிறது?
புனித வெள்ளி என்பது இயேசு அனுபவித்த துன்பங்களை பறைசாற்றும் சோகமான நாளாகும். ஆண்டுதோறும் ஈஸ்டர் தினத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக இயேசு துன்பப்பட்டு இறந்த விதத்தை நினைவுகூறுகின்றனர்.
ஒவ்வொரு புனித வெள்ளி தினத்திலும் கிறிஸ்தவர்கள் தங்கள் பாவங்களுக்காக இயேசு துன்பப்பட்டு இறந்த விதத்தை மதிக்கிறார்கள். இயேசுவின் வலிமிகுந்த சிலுவையில் அறையப்பட்டதை விவரிக்கும் ஒரு சேவையில் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். சிலர் இந்நாளில் தங்கள் துக்கத்தைக் காட்ட சாப்பிடுவதைத் தவிர்த்துவிடுகின்றனர். கத்தோலிக்க தேவாலயங்கள் துக்கத்தின் அடையாளமாக தங்கள் பலிபீடங்களை வெறுமையாக அகற்றி, மணிகளை முடக்கி வைக்கின்றனர்.
புனித வெள்ளி அன்று, கிறிஸ்தவர்கள் இறைச்சியை உண்பதில்லை, பாரம்பரியமாக உணவான ரொட்டி தூண்டுகளுடன், சிலர் மீன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மீன் உண்பதற்குக் காரணம், அது கடலில் இருந்து வருவதால், அது வேறு வகையான சதை என நம்பப்படுகிறது. மீன் வடிவங்கள் தங்கள் மதம் தடைசெய்யப்பட்ட நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் அடையாளம் காணும் ரகசிய சின்னங்களாகவும் நம்பப்பட்டது. இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களில் பலர் மீனவர்களாகவும் இருந்தனர். புனித வெள்ளியில் உணவுக்கான தயாரிப்பு பொதுவாக ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கும், ரொட்டிக்கான மாவை பிசைந்து வைப்பதில் இருந்து ஆரம்பமாகிறது.