HOME » CHRISTMAS

Christmas

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சுவாரஸ்சிய வரலாற்றுப் பதிவுகள்!

    உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆனால் பண்டைய காலத்தில் பாரசீக நாட்டில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் ஒரு நாள் விடுதலை அளிக்கப்படும் நாளாக இந்நாள் அமைந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    கிறிஸ்துமஸ் என்றாலே விதவிதமான கேக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் அவர் கொடுக்கும் பரிசுப்பொருள்கள், சர்ச் வழிபாடுகள் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். அதற்கடுத்தாற்போல் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரக்கூடிய விடுமுறை நாள்கள் தான். இந்நாள் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமில்லாமல் அனைத்துத்தரப்பட்ட மக்களும் இந்த விடுமுறை நாள்களை குடும்பத்தோடு கொண்டாடும் நாளாகவேப் பார்க்கின்றனர். இப்படி மாதிரியான விஷயங்களை பற்றித் தான் இதுவரை நாம் பேசியிருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் தினத்திற்கு பின்னால் பல சுவாரஸ்சிய கதைகளும் அடங்கியுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகின்றனர். இதோ உங்களுக்காக அந்த பதிவுகள் இங்கே…

    கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்ட் மாஸ் என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இதுவரை இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாகத் தெரியவில்லை என்பதால் கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலும் யூதர்களின் நாள்காட்டிகள் மூலம் கணக்கிட்டு ஒரு யூத அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாரசீக நாட்டில் உள்ள அனைத்து அடிமைகளுக்கும் ஒரு நாள் விடுதலை அளிக்கப்படும் நாளாகவும், சிலர் தங்கள் அடிமைகளைப் பரிசாக பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் 1377 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாகக் கொண்டாடினார்.இந்தோனிசியா, பாரீஸ் போன்ற அனைத்து உலக நாடுகளிலும் டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் தினத்தை பல்வேறு விதங்களில் கொண்டாடும் வேளையில், தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்துக்கொள்ள பல பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்கியுள்ளனர். அதே சமயம் கிழக்கு மரபு திருச்சபைகளை சேர்ந்த கிறிஸ்துவர்கள் ஜனவரி 7 ஆம் தேதியை கிறிஸ்துமஸ் விழாவா கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமாக இந்நாள் கொண்டாடப்பட்டாலும் இந்நாள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பண்டிகையாகவே பார்க்கப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் மரம்….வாழ்த்து அட்டை… வரலாறுகள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்படுவதோடு, அதை கலர்புல்லான லைட்டுகளால் அலங்கரிப்பார்கள். இது போன்ற நடைமுறைகள் முதன் முதலில் 1510 ஆண்டு ரிகா என்ற இடத்திலும், 1840 ஆம் ஆண்டு இங்கிலாந்து முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியுள்ளதாம். இதோடு  கடந்த 1847ம் ஆண்டு பிரான்ஸ் தான் முதன் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகிறது.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும், வழிபாடுகளும்..

    ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் அதவாது டிசம்பர் 24 ஆம் தேதி நள்ளிரவு முதலே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களில் சென்று சிறப்பு வழிபாடுகளும், நள்ளிரவு திருப்பலியில் நற்கருணை விருந்தும் நடத்தப்படும்.

    ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் பேராலயங்களில் நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு மரியாள்,  ஞானிகள், செரூபங்கள், இடையர்கள் போன்றவற்றை வைத்து அழகு பார்ப்பார்கள். பின்னர் விண்மீனுக்கு அடையாளமாக காகிதத்திலான விண்மீன்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள்.

    நள்ளிரவு திருப்பலி முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்லும் கிறிஸ்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விருந்திற்கு அழைப்பார்கள். கேக்குள், இனிப்புகள் வழங்கி குடும்பத்தோடு கொண்டாடுவார்கள். இத்தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே விதவிதமான கேக்குள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

    இதோடு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள் உள்பட பல தரப்பினருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கி, வாழ்த்துவதும் உண்டு. பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அந்த சமயத்தில், இசைக் குழுவினர் அணியாகச் சென்று வீடுகள்தோறும் தேவ கீர்த்தனைகளைப்  பாடுவார்கள். இவ்வாறு கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அனைத்து மதத்தினரும் உற்சாகத்துடன் கொண்டாடக்கூடிய பண்டிகையாகவே உள்ளது.  குறிப்பாக குழந்தைகள் என்னடா பரிசுப்பொருள்களை கிறிஸ்துமஸ் தாத்தா கொண்டுவருவார்கள் என ஆர்வத்துடன் காத்திருக்கும் விழாவாகவும் கிறிஸ்துமஸ் தினம் பார்க்கப்படுகிறது.