Chirag Paswan (சிராக் பாஸ்வான்)

  இளம் அரசியல்வாதி, நடிகர், சமூக சேவகர், நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகத்திறன் கொண்ட சிராக் பஸ்வான்!

  அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும மத்திய அமைச்சர் ராம் விலான் பஸ்வாவின் மகன் சிராக் பஸ்வான், அரசு சாரா நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் சினிமாவிலும் நடத்த இவர் எப்படி அரசியலிலும் நுழைந்தார், என்னென்ன பதவிகள் வரை பெற்றுள்ளார் என்பது குறித்த ஓர் பார்வை.

  ஆரம்ப கால வாழ்க்கை:

  பீகார் மாநிலம் ககாரியா என்ற இடத்தில் 1982 ஆம் அக்டோபர் 32 ல் ராம் விலாஸ் பஸ்வான் மற்றும் ரீனா பஸ்வான் தம்பதியினருக்கு மகனாப் பிறந்தார் சிராக் குமார் பஸ்வான். புது தில்லியில் உள்ள தேசிய திறந்த வெளி பள்ளியான ஸ்வதேசியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த நிலையில், 2003 ஆம் ஆண்டு பிடெக் கணினி தொழில்நுட்ப அறிவியல் பாடத்திட்டத்தில் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஜான்சியில் உள்ள புந்ததெல்கன் பல்கலைக்கழக்கத்தில் பிடெக் கம்யூட்டர் என்ஜீனியரிங் படிப்பில் சேர்ந்த அவர் 3 வது செமஸ்டர் வரை படித்து படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டார்.

  லோக் ஜனதா கட்சியை இவரது தந்தை வழிநடத்தி வந்த நிலையில், அரசியலில் கால் பதிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் சினிமாவில் ஆர்வம் காட்டிய அவர், கங்கனா ரணாவத்துக்கு ஜோடியாக மைலே நா மிலே ஹம் (2011) என்ற ஹிந்தித் திரைப்படத்தில் நடித்தார். இதற்காக 2012ம் ஆண்டு சிராக் ஸ்டார்டஸ்ட் விருதையும் பெருமைக்குரியவரானார்.

  சினிமாவில் மட்டுமில்லாது பொது வாழ்க்கையிலும் ஈடுபாடு கொண்ட சிராக் பாஸ்வான் தனது மாநிலத்தின் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைகளை வழங்குவதற்காக சிராக் கா ரோஜ்கர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்திவருகிறார். இந்நிலையில் தான் சந்தர்ப்ப சூழலால் அரசியலில் நுழையும் வாய்ப்பையும் பெற்றார்.

  அரசியல் பயணம்..

  2014 ஆம் ஆண்டு சிராக் பஸ்வான், பீகாரில் உள்ள ஜமுஸ் தொகுதியில் இருந்து 16 வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் தான், இவரது தந்தை ஹாஜிபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி மூலம் வெற்றி றெ்றார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சித் திட்ட கமிட்டி உறுப்பினரக செயல்பட்டார். இதோடு இந்திய ஆலோசனைக்குழு உறுப்பினர், பொருளாதார விவகாரம் மற்றும் நிதி சேவைத்துறையின் ஆலோசனைக்குழு உறு்பினராகவும், ஜமுய் ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைவராக செயல்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பஸ்வான் அதே தொகுதியில் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார்.

  அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்த சிராக் பஸ்வான்…

  இளம் அரசியல்வாதியாக மற்றும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த சிராக் பஸ்வான், பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்மறையாக ஆதரவு தந்தார். இதோடு பாஜகவின் நம்பிக்கைக்குரிய பி டீமாக இருந்த சிராக் பஸ்வான், தமது லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூவுக்கு எதிராக மட்டுமே போட்டியிட வைத்தார். இதனால் பாஜகவை விட ஜேடியூ குறைந்த இடங்களில் தான் வெல்ல முடிந்தது. ஆனால் பீகார் வெற்றிப் பெற்றதற்கு உறுதுணையாக இருந்த சிராக் பஸ்வானை பாஜக கண்டுக்கொள்ளவில்லை. பாஜகவை நம்பிய கட்சிகள் அழிக்கப்பட்டே இருக்கின்றன என்பதற்கான இப்போதைய சாட்சியாக அரசியல் களத்தில் வலம் வருகிறார் சிராக் பஸ்வான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  பீகார் அரசியலில் தனிமரமாக நிற்கிறார் சிராக் பாஸ்வான்

  கடந்த பீகார் சட்டசபை தேர்தலில்,பாஜகவின் பி டீமாக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தான், பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதால், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சிராக் பஸ்வானிற்கு எதிராக செயல்பட தொடங்கினர். குறிப்பாக சிராக் பாஸ்வானுக்கு எதிராக சித்தப்பா, பசுபதி குமார் பராஸ், பிரின்ஸ்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில் 5 எம்பிகள் கூண்டோடு ஜேடியூவுக்கு சென்றனர். இதனால் பீகார் அரசியலில் தனி மரமாக நின்றார் சிராக் பஸ்வான். இந்த சூழலில் தான், சிராக் பஸ்வான் தன்னுடைய தந்தை ஆரம்பித்த சிராக் பாஸ்வான் கட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, தந்தை பிறந்த நாளையொட்டி கடந்த ஜூலை 5 தேதி ஆஷிர்வாத் யாத்திரை ஒன்றைத் தொடங்கினார். இதற்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவாக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இளம் அரசியல்வாதியாக அறியப்பட்ட இவர், பல இளைஞர்களின் எழுச்சியாகவும் வலம் வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.