Bhupesh Baghel (பூபேஷ் பாகேல்)

    சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலின் வாழ்க்கை வரலாறு!

    தன்னுடைய வாழ்வின் ஆரம்பம் முதலே அரசியலில் ஆர்வம் உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய அரசியல் குருவின் வழிகாட்டுதலின் படி அரசியலில் அடி எடுத்து வைத்து, தான் பிறந்த மாநிலத்தின் மூன்றாவது முதல்வராக வெற்றிகரமாக பதவியேற்றுள்ளார். சத்தீஸ்கர் மாநில முதல்வரின் வாழ்க்கை வரலாறை தான் நாம் இப்போது பார்க்கவிருக்கிறோம்.

    ஆரம்பகால வாழ்க்கை:

    பூபேஷ் பாகல் 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி தற்போதைய சட்டீஸ்காரிலுள்ள துர்க் மாவட்டத்தில், பதான் என்னும் இடத்தில் பிறந்தார். பூபேஷின் தந்தையின் பெயர் நந்தகுமார் பாகல் மற்றும் தாயின் பெயர் பிந்தேஸ்வரி பாகல். இவரின் தந்தை விவசாயியாக இருந்தார். ராஜ்பூரில் உள்ள பண்டிட் ரவிசங்கர் ஷுக்லாபல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பூபேஷ் பாகலிற்கு முத்தேஸ்வரி என்பவருடன் திருமணம் நடந்து, இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். பூபேஷ் பாகலின் மனைவி முக்தேஸ்வரி பாகல் பிரபல ஆன்மீக குரு சுவாமி ஆத்மானந்தாவின் மருமகள் ஆவார். மேலும் பிரபல இந்தி எழுத்தாளரான டாக்டர் நரேந்திர தேவர்மா பூபேஷின் மாமனார் ஆவார்.இவரின் இளமை காலம் முதலே இவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது.

    அரசியல் பயணம்:

    இவர் தனது குருவாக நினைக்கும் சந்துலால் சந்திரகார் என்பவரின் வழிகாட்டுதலின்படி 1980 ஆம் ஆண்டு அரசியலில் அடி எடுத்து வைத்தார். 1985 ஆம் ஆண்டு இந்திய இளைஞர் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டு துர்க் மாவட்டத்தின் கட்சி தலைவராக பொறுப்பேற்றார். 1993 ஆம் ஆண்டு பதான் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு மத்திய பிரதேச இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

    அதன்பின் 1998 ஆம் ஆண்டு மீண்டும் பதான் தொகுதியில் சட்டசபை உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற, பூபேஷுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி இவருக்கு அளிக்கப்பட்டது.

    2003 ஆம் ஆண்டு மீண்டும் பதான் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவராக 2008 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதைத் தவிர 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் இரண்டு தேர்தல்களிலும் இவருக்கு தோல்வியே கிடைத்தது. இவரின் மிக பொறுப்பான செயல்பாடுகளாலும், அரசியலில் இவர் காட்டிய தீவிரத்தாலும் 2014 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய தேசிய காங்கிரஸின் மாநில தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

    2018 ஆம் ஆண்டு நடந்த சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பீபஷ் பாகலின் கடும் முயற்சியால் காங்கிரஸ் கட்சியை மிகப் பெரும் அளவில் வெற்றி பெற செய்தார். அம்மாநிலத்தில் 90 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 68 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்தது. 15 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த முகேஷ் பாகன் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தன்னுடைய பரம எதிரியான பாஜகவை சேர்ந்த ராமன் சிங்கை தோற்கடித்து மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

    பூபேஷ் பாகலின் சிறப்பியல்புகள்:

    பபூபேஷ் பாபு சத்தீஸ்கர் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் ஆவார். இவருக்கு தன்னுடைய வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அரசியலின் மீதும் சமூக சேவைகளின் மீதும் அதிக ஆர்வம் இருந்து வந்தது. மாணவராக இருக்கும் போதே பல்வேறு சமூக சேவைகளை ஆர்வமுடன் செய்து வந்தார். அரசியல்வாதிகள் என்றால் எப்போதும் ஆடம்பரமாகவே இருப்பார்கள் என்ற நிலை மாறி மிக எளிமையான முறையில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மேலும் எளிமையான முறையில் திருமணம் செய்வதன் முக்கியத்துவத்தை பற்றி அடிக்கடி வலியுறுத்துவார். இவர் ஆண்டுதோறும் தன்னுடைய செலவில் இலவச திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் பாஜகவை சேர்ந்த ராமன் சிங் என்பவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். அரசியலின் பரம எதிரிகளாகவே இவர்கள் இரண்டு பேரையும் குறிப்பிடலாம்.

    சர்ச்சைகள்:

    2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முகேஷ் பாகல் ஆபாச சிடி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார். அப்போதைய அமைச்சர் ராஜேஷ் முன்னாத்தை தவறாக சித்தரித்து ஆபாச செய்தியை வெளியிட்டதற்காக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிபிஐ இவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைத்தது.

    சொத்து மதிப்பு:

    இவரின் மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 22 புள்ளி 47 கோடிகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 23.5 கோடி சொத்துக்களாகவும் 58.3 லட்சம் பொறுப்புகளாகவும் உள்ளன.