இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டர் அக்சார்பட்டேலின் வாழ்க்கை வரலாறு!!
எந்த வித கிரிக்கெட் பின்புலமுமின்றி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்த அக்சார் படேல் இந்திய அணியின் வெற்றிகரமான ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இடது கை துடுப்பாட்டம் மற்றும்இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்து வந்த பாதையை பற்றி இப்பதிவில் பார்போம்.
ஆரம்பகால வாழ்க்கை:
அக்சார் பட்டேலின் முழு பெயர் அக்ஸார் ராஜேஷ்பாய் பட்டேலாகும். இவர் குஜராத்தில் உள்ள அனந்த் எனுமிடத்தில் 1994 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பிறந்தார். இவரின் தந்தை பெயர் ராஜேஷ் பட்டேல் மற்றும் தாயின் பெயர் ப்ரீத்தி பென் பட்டேல் ஆகும். மேலும் அக்சார் பட்டேலுக்கு சன்ஷிப் பட்டேல் என்ற மூத்த சகோதரரும் சிவாங்கி பட்டேல் என்ற மூத்த சகோதரியும் உள்ளனர். இவர் குஜராத்தில் உள்ள தரம்சிங் தேசாய் என்ற பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பின் சேர்ந்து படிப்பை முடிக்காமலேயே கல்லூரியில் இருந்து வெளியேறி விட்டார்.
உண்மையிலேயே அக்சாருக்கு கிரிக்கெட் விளையாட்டு வீரராக மாற வேண்டும் என்ற விருப்பமே இல்லை. ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக உருவாக வேண்டும் என்பதுதான் அவர் என் விருப்பம். ஆனால் அவருக்கு 15 வயதாக இருக்கும் போது இவரின் நண்பர் தீரன் கன்சாரா என்பவர் அக்சார் படேலின் கிரிக்கெட் விளையாடும் திறமையை கண்டறிந்து பள்ளிகளுக்கு இடைப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற அவரை ஊக்குவித்தார்.
கிரிக்கெட் வாழ்க்கை:
முதன்முதலில் பேட்ஸ்மேன் ஆகத்தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார் அக்சார் பட்டேல் ஆனால் அதற்கு பின்னர் சிறந்த பந்துவீச்சாளராக மாறி இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டார்.
2010 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. துரதிஷ்டவசமாக விபத்து ஏற்படுவதற்கு முன்னர் தான் குஜராத்தின் U-19 அணியில் விளையாடுவதற்காக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் அண்டர் 19 அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இந்த காலகட்டங்களில் கிரிக்கெட் விளையாடுவதை முழுவதுமாக நிறுத்தி விட எண்ணி இருந்தார், அக்சார் பட்டேல். ஆனால் அக்சார் பட்டேலின் பாட்டி தான் அவரை கிரிக்கெட் விளையாட ஊக்குவித்து மீண்டும் சிறந்த கிரிக்கெட் வீரராக மாறும்படி ஊக்குவித்தார்.
2012 ஆம் ஆண்டு முதல் ரஞ்சிக் கோப்பை போட்டியில் அக்சாருக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு 2013-14 ரஞ்சிக் கோப்பை சிறப்பாக விளையாடிய வீரர்களின் வரிசையில் அக்சார் பட்டேலின் பெயரும் இடம் பெற்றது. அந்தத் தொடரில் மொத்தமாக 369 ரன்கள் எடுத்து 29 விக்கெட்டையும் வீழ்த்தி மிக சிறப்பான ஒரு விளையாட்டை வெளிப்படுத்தியிருந்தார். 2014 ஆம் ஆண்டு பிசிசிஐ அண்டர் 19 கிரிக்கெட்டர் ஆப் தி இயர் என்று விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் ஒரு போட்டியில் கூட அந்த ஆண்டு அவரால் விளையாட முடியவில்லை. 2014 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தமான அந்தத் தொடரில் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தி 6.22 என்ற நல்ல எகானமியை வைத்திருந்தார்.
அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது அக்சார்பாடேளுக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இவரை 2021 ஆம் ஆண்டு நடந்த ஏலத்திலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டது.
சர்வதேச கிரிக்கெட்:
2014 ஆம் ஆண்டு ஐ பி எல் சிறப்பாக செயல்பட்டதினால் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் விளையாடுவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி20 போட்டியை இந்திய அணி சார்பாக விளையாடினார். ஜனவரி 2021 இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அப்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை அக்சார் படேல் விளையாடினார்.
கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச போட்டியில் அவர் விளையாடி அசத்தினார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டையும் வீழ்த்தி அறிமுக போட்டியில் இந்த சாதனையை படைத்த ஒன்பதாவது இந்திய பந்துவீச்சாளர் என்று பெருமையை பெற்றார். அந்தத் தொடரில் மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் கையில் எடுத்தவர்கள் வரிசையில் இரண்டாவதாக இடம் பெற்றார்.
கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜூலை மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சொத்து மதிப்பு:
அக்சார் படேலின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 37 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இவரின் பெரும்பகுதி வருமானம் பிசிசிஐ-காக விளையாடியதன் மூலம் இவர் பெற்றுள்ளார்.