HOME » ACTOR SURIYA

Actor Suriya

  நடிகர் சூர்யாவின் திரையுலக பயணம்!

  தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன் ஆகும். இவர் தமிழ் திரையுலகில் பெற்ற வெற்றிகள் ஏராளம் என்றே சொல்லலாம். இவர் நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் ஆவார். இவர் சிவகுமார் மற்றும் லட்சுமி தம்பதியினருக்கு ஜூலை மாதம் 23, 1975ல் மகனாக பிறந்தார்.

  தீவிரமான முருக பக்தரான இவர் கமலஹாசனின் தீவிர ரசிகனும் கூட. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தை பார்த்து, தன் தலை முடியை மாற்றிக்கொண்டதும் இவர் குறும்பான ரகசியங்களில் ஒன்று. இவர் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  ஆடை தயாரிப்பு தொழில் துறையில் தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது மிகச்சிறந்த திரையுலக நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 1997ம் ஆண்டு திரையுலகில் இயக்குனர் வசந்த் மூலமாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமானவரும், பருத்திவீரனில் பெரிய ஹிட் கொடுத்த நடிகருமான கார்த்தியின் அண்ணணும் ஆவார்.

  எந்தவிதமான திரையுலக முன் அனுபவமும் இல்லாமல் தமிழ் திரையுலகில் தடம் பதித்த இவர் தற்போது முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நேருக்கு நேர் என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் முதன்முதலாக அறிமுகமானார். 1997களில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து சூர்யா நடித்துள்ளார்.

  மேலும் காதலே, நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பிரண்ட்ஸ் இதைத்தொடர்ந்து மௌனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன், ஆயுத எழுத்து, மாயாவி என பல படங்களில் இவர் நடித்துள்ளார். இன்னும் இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இவர் திரைப்படம் அல்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஏர்செல், சன்ஃபீஸ்ட், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பல விளம்பர தூதுவராகவும், விளங்குகிறார்.

  இவர் பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல் மற்றும் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ஜோதிகாவை செப்டம்பர் மாதம் 11ம் தேதி 2006 ல் கரம் பிடித்தார். மேலும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஏழை எளிய குழந்தைகளுக்காக அகரம் என்ற பெயரில் ஃபவுண்டேஷன் ஒன்றை தொடங்கிய இவர் அதை வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார்.
  2003 ல் வெளியான காக்க காக்க திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான ஐஐடிஎப்ஏ(IITFA) என்ற விருதும், நந்தா படத்தில் துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் பெற்றுள்ளார். மேலும் 2004ல் வெளியான பேரழகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், 2008ல் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருது, ANTI STYLISH YOUTH ICON என்று கூறி சவுத் ஸ்கோப் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

  இதுபோன்று 2009களிலும் 2010 களிலும் என்டயர் ஆப் தி இயர் (ENTIRE OF THE YEAR) க்காண விஜய் விருது களையும் பெற்றுள்ளார். மேலும் 2012ல் வெளியான மாற்றான் திரைப்படத்திற்காக சினிமா விருதையும், 2001, 2005, 2008 வருடங்களில் வெளியான திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
  நேருக்கு நேர் படத்தில் தொடங்கிய இவரின் திரையுலகப்பயணம் பிரண்ட்ஸ், உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, நந்தா, காக்க காக்க, பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் என பல வெற்றி படங்களில் நடிப்பதற்கு காரணமாகவும், மேலும் இந்த திரைப்படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் திரையிடப்பட்டு வெற்றி கண்டதாகவும் தெரியவருகிறது.

  இதை தொடர்ந்து 2020ல் வெளியான சூரரை போற்றுவோம் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடிதந்தது. இது கொரானா காலகட்டத்தில் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில், திரையரங்குகள் செயல்படலாம் என்ற அறிவிப்பு வந்தபோது வெளியான திரைப்படமாகும்.

  சூர்யா indianexpress.com ல்,சூரரை போற்றுவோம் படத்தை உருவாக்குவதில் இருந்த சவால்களையும், இந்த படம் உணவு பற்றாக்குறை, குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு இவற்றால் தினசரி பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு, பொருத்தமான ஒரு விமான நிறுவனத்தை உள்ளடக்கிய கதை என்றும், இது தனக்கு மிகவும் சவாலாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த படத்திற்கு சூர்யாவிற்கு தேசிய விருது கிடைத்தது.

  2021 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைம் ஓட்டிட்டு தளத்தில் வெளியான ஜெய் பீம் படம் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, பல விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்த சர்ச்சையிலிருந்து மீண்டு வந்த சூர்யா தற்போது 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் ஒரு நியூ கேரக்டராக தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.

  இப்படி ஆக சிறுவயதிலிருந்து அவரின் முன்னேற்றங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.