நகைச்சுவையில் மன்னனாக வலம் வரும் புரோட்டோ சூரியின் சுவாரஸ்சிய திரைப்பயணம்!
புரோட்டா காமெடியில் பேமஸாகி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப்பிடித்த காமெடி நடிகர் சூரியின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் ரணமானது.
“பந்தயத்துக்கு நான் ரெடி“ வாங்க ஆரம்பிக்கலாம் என அசால்ட்டாக 50 புரோட்டாவை சாப்பிடும் போட்டியில் எதார்த்தமாக நடித்து திரைத்துறைக்குள் என்ட்ரியாகி பேமஸானவர் தான் நடிகர் சூரி. எவ்வித பின்புலம் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள் தான் மிகவும் ரணமானது. ஆனாலும் திதைத்துறையில் சாதிக்க வேண்டும் என்றும் எண்ணத்தில் விடா முயற்சியுடன் போராடி வெற்றிக்கண்ட நடிகர் சூரியின் சுவாரஸ்சிய திரைப்பயணம் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
ஆரம்ப கால வாழ்க்கை:
மதுரையில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் சேங்கையரசி தம்பதியர்களுக்கு ஆறு மகன்களில் ஒருவராக பிறந்தார் நடிகர் சூரி. 7 ஆம் வகுப்பு வரை படித்த சூரி அதற்கு மேல் படிப்பு வரவில்லை என பள்ளிக்குச் செல்லவில்லை. வறுமையில் வாடும் தனது குடும்பத்தை காப்பதற்கு என்ன வேலை என்றாலும் சலிக்காமல் செய்துள்ளார். தன்னிடம் உள்ள நடிக்கும் மற்றும் நடனமாடும் திறனை வைத்து ஊர்ப்பக்கம் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வாராம். பின்னர் இந்த திறமையை வைத்து திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு மதுரையிலிருந்து சென்னைக்கு கிளம்பினார் சூரி.
சென்னை சென்று சினிமாவில் நடிப்பதற்காக ஒவ்வொரு இடமாக ஏறி இறங்கிய போதும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் வயிற்று பசிக்காக சினிமா தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்ட இவர் லாரி கிளீனர், பெயிண்ட் அடிக்கும் வேலை என கிடைத்த வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்.
இப்படித்தான் ஒரு நாள், மந்திரவாசல் என்கின்ற நாடகத்திற்காக மின் வேலைகள் செய்ய எலக்ட்ரீசியனாக சென்ற இவர், நாடகத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்தார். இது தான் சென்னை வந்து இவரின் பயணத்தைத் தொடங்க ஆரம்பமாக அமைந்தது.
சீரியல் மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்த சூரி:
திரைத்துறையில் பேமஸ் ஆவதற்கு முன்னதாக புகழ் பெற்ற திருமதி செல்வம், சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறு சிறு வேடத்தில் அரங்கேறினார் என்ற நம்ப முடிகிறதா? இதோடு மட்டுமின்றி வெள்ளத்திரையில் சங்கமம், ஜேம்ஸ்பாண்டு, வின்னர், தீபாவளி போன்ற திரைப்படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் சூரி. இதுப்போன்று பல திரைப்படங்களில் நடித்த சூரிக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு. அதிலும் புரோட்டோவை வாழ்க்கையில் பிடிக்காத சூரியை 50 புரோட்டோ சாப்பிடும் போட்டியில் கலந்துக்கொள்ளும் சீன்ல மாஸ் கட்டியிருப்பார். “போட்டிக்கு நாங்க ரெடி,. வாங்க சாப்பிடலாம் எனவும், கோட்ட அழி திரும்பவும் போட்டியை ஆரம்பிக்கலாம்“ என்ற வசனங்களைப் பேசி நடித்த சூரிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
காமெடியான களம் இறங்கிய சூரி:
வெண்ணிலா கபடிக்குழு வெற்றியைத்தொடர்ந்து பல பட வாய்ப்புகள் சூரிக்கு குவியத் தொடங்கியது. குறிப்பாக சிவகார்த்திக்கேயனுடன் மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறமையை தட்டித் தூக்கி எறிந்திருப்பார். இந்த இருவரும் ஒவ்வொரு படத்தில் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இருக்காது. இதோடு தேசிங்கு ராஜா, புஷ்பா புருஷனாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார் சூரி. இதுப்போன்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் தனக்கென ஓர் இடத்தைப்பெற்றுள்ள சூரி குறுகிய காலத்தில் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையான காமெடி நடிகராக வலம் வருகிறார் சூரி..
இவரின் திறமை,உழைப்பு போன்றவற்றால் முன்னேறிய சூரிக்கு மற்ற நகைச்சுவை நடிகர்களைப்போல ஹீரோ சான்ஸ் வந்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கி நகைச்சுவையில் தனக்கே உரிய பாணியில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் காமெடியான இல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.
குடும்ப வாழ்க்கை:
மகாலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம் செய்த சூரிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நடிப்பில் மட்டுமின்றி மதுரையில் அம்மா உணவகம் என்ற ஹோட்டலைத் தொடங்கி பிசினஸிலும் வெற்றி கண்டுள்ளார்.
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்காக போராடி வெற்றிக்கண்ட பெருமைக்குரியவராக விளங்குகிறார் நகைச்சுவை நாயகன் சூரி.