கிராமத்து இளைஞர்களின் பிடித்தமான நடிகரும் இயக்குனருமான சசிகுமார் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!
காதல் என்றால் இப்படி தான் உயிரை கொடுத்து உதவ வேண்டும் என்கிற மனப்பான்மையை நமக்கு மீண்டும் நியாபகம் செய்தவர் சசிகுமார் என்றே சொல்லலாம். இவர் இயக்கிய படங்கள் சிலதே என்றாலும், அவை ஒவ்வொன்றிலும் பல வகையான ஆழ்ந்த கருத்துக்களை தவறாமல் வைத்து மக்களை தன் பக்கம் கவர்ந்திருந்தார். குறிப்பாக கிராமத்து இளைஞர்களுக்கு இவரது படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் இவரது இயல்பான நடிப்பு என்பது இவரை அடுத்து லெவெலுக்கு கொண்டு சென்று விட்டது என்றே சொல்லலாம். இவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இளமை பருவம்
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் செப்டம்பர் 28, 1974 ஆம் ஆண்டில் மதுரையில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை கொடைக்கானலில் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் மேல் படிப்பை முடித்தார். இவருக்கு சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது 20 ஆம் வயதில் தன் மாமா கந்தசாமியிடம் திரைப்படங்களில் பணிபுரிய தொடங்கினார். இப்படி தான் இவர் இளம் வயதிலேயே சினிமாவுக்குள் நுழைந்தார்.
சினிமா பயணம்
இவர் முதன்முதலில் சேது படத்த்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதற்கு அடுத்தாக சில படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே போல சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். அடுத்தாக 2008-இல் சுப்பிரமணியபுரம் படத்தில் பரமா என்கிற பாத்திரத்தில் நடித்ததோடு அந்த படத்தை இயக்கியும் இருந்தார். இந்த படம் இன்று வரையிலும் பேசப்படும் படமாக இருந்து வருகிறது. அடுத்தாக நாடோடிகள் படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடித்திருந்தார். இந்த படத்தில் மிக அற்புதமான நேர்மையான நடிப்பைக் கொடுத்திருந்தார். இந்த படம் மக்களின் மனதில் மிக முக்கிய படத்தை பிடித்து விட்டது என்றே சொல்லலாம்.
இதற்கு அடுத்து போராளி படத்திலும், சுந்தரபாண்டியன் படத்திலும் நடித்து அசத்தி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் நடித்த சுந்தரபாண்டியன் படம் சிறப்பான வெற்றியை பெற்றது. பிறகு இவர் குட்டி புலி படத்தில் நடித்தார். படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது.அடுத்தாக 2014-இல், ஒரு காதல் ஆக்ஷன் படமான பிரம்மன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருந்தது. பெரும்பாலும் இவர் நடித்த கிராமத்து கதைக்களம் கொண்ட படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்ற இறக்கங்கள்
2013 ஆம் ஆண்டில், சசிகுமார் இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தார். இளையராஜாவின் 1000-மாவது படம் என்பதால் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இப்படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.பிறகு 2017-இல் நடித்த கொடிவீரன் படமும் சிறப்பாக ஓடவில்லை. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கு அடுத்து, எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2 படங்களில் நடித்திருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு 2021-இல் உடன்பிறப்பே படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் போன்ற குடும்பப் படங்களில் நடித்திருந்தாலும் அவை பெரிதாக வெற்றி பெறவில்லை.
சசிகுமார் தயாரிப்பு
பன்முக தன்மை கொண்ட சசிகுமார் தனக்கான ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். குறிப்பாக சுப்பிரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிகுமார் அறிமுக இயக்குநரான பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தையும், 2010-இல் வெளியான ஈசன் படத்தையும் தயாரித்திருந்தார். அவரது தயாரிப்பு முயற்சிகளில் பொறாளி மற்றும் சுந்தரபாண்டியன் ஆகிய படங்களும் அடங்கும். மேலும், பாலு மகேந்திரா இயக்கிய தலைமுறைகள் படத்தையும் அவர் தயாரித்திருந்தார். இதற்கு அடுத்தாக தாரை தப்பட்டை, கிடாரி, பாலே வெள்ளையத்தேவா, கொடிவீரன் ஆகிய படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் தயாரித்த பசங்க படமானது சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் பெற்று இருந்தது. கே போல மேலும் சில படங்கள் பிலிம்பேர் விருதுகளையும், மாநில அரசு விருதுகளையும் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.