பெண்களின் கனவு நாயகனான ஹரிஷ் கல்யாண் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!
திரை உலகில் சிலர் மட்டுமே மிக குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடம்பிடித்து விடுவார்கள். அந்த வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் குறிப்பிடத்தக்கவர். மிக இயல்பான நடிப்பின் மூலமும், வசீகரமான தோற்றத்தை கொண்டும் இவர் இன்றைய இளம் பெண்களின் மனத்தில் குடிகொண்டு விட்டார். இவர் நடித்த படங்கள் மிக சிலதே என்றாலும், அவற்றில் மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவரின் இளம் பருவம் முதல் திரை பயணம் வரை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இளமை பருவமும், சினிமா முயற்சியும்
ஹரிஷ் கல்யாண் ஜூலை 29, 1990-இல் பிறந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். இவருக்கு கல்லூரி படிக்கும்போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் சினிமா துறையில் நடிக்க முயற்சித்துள்ளார். இயக்குனர் சாமியின் சர்ச்சைக்குரிய சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாண் 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார். இந்த படத்தில் அன்பு என்கிற பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியானதும், மாறுபட்ட விமர்சனங்களைச் சந்தித்தது. அடுத்தாக அரிது அரிது என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். ஆனால் அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது.
இவர் அடுத்தாக, 2022 ஆம் ஆண்டில் S. A. சந்திரசேகரின் சட்டப்படி குற்றம் நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு தோல்வியையே தந்தது. இதுவும் பாக்ஸ் ஆபிஸில் மோசமான ரேட்டிங்கை பெற்றது. இப்படி ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இந்த படங்களுக்கு அடுத்தாக கருணாஸ், ஸ்வேதா பாசு பிரசாத் மற்றும் சஞ்சனா சிங் ஆகியோருடன் 2013 ஆம் ஆண்டு நகைச்சுவைத் திரைப்படமான சந்தமாமாவில் நடித்தார். பல தோல்வி படங்களுக்கு பிறகு ஹரிஷ் கல்யான் 2014 ஆம் ஆண்டு வெளியான த்ரில்லர் திரைப்படமான பொறியாளன் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தில் இவரது நடிப்பிற்காக கவனிக்கப்பட்டார். இதில் இருந்து தான் பலருக்கும் ஹரிஷ் கல்யாணை பிடிக்க தொடங்கியது. பொறியாளன் ஹரிஷின் முதல் வெற்றிகரமான முயற்சியாக அவரது நடிப்பை விமர்சகர்கள் பாராட்டினர். இதற்கு அடுத்தாக 2016-இல் வில் அம்பு திரைப்படத்தில் ஒரு முன்னணி பாத்திரத்தில் ஹரிஷ் கல்யான் நடித்தார். மேலும், இந்த கால கட்டத்தில் சில தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இருப்பினும் அந்த படங்கள் பெரிய அளவிற்கு பேசு பொருளாக மாறவில்லை. எனவே, இவர் தனது அடுத்த அத்தியாயத்தை பிக் பாஸ் மூலம் தொடங்கினார்.
பிக் பாஸ்
திரைப்படங்களில் நடித்து வந்த ஹரிஷ் கல்யான் 2017 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இதில் தன்னால் முடிந்த அளவு சிறந்த முறையில் விளையாடி மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதற்கு அடுத்ததாக 2018ல் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த பியார் பிரேமா காதல் படத்தில் நேர்த்தியான நாயக்கன் தரக்கூடிய நடிப்பை வெளிக்காட்டினார். இந்த படம் பல இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்த படமாகவும் இருந்தது.
இதற்கு அடுத்து மேலும் சில காதல் கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்தார் ஹரிஷ். அந்த வகையில், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘பியார் பிரேம காதல்’, ‘தாராள பிரபு’, ‘ஓ மாணப்பெண்ணே’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக உயர்ந்தார். குறிப்பாக இளம் பெண்களின் கனவு நாயகன் என்கிற இடத்தை பிடித்தற்கு இந்த படங்கள் உதவின என்றே சொல்லலாம்.
மேலும் இவர் ஒரு நடிப்பதோடு நிறுத்தி கொள்ளலாமல், பின்னணி பாடகராவும் தன்னை உயர்த்தி கொண்டார். இவர் 2016-இல் பாடிய ‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்’ என்கிற பாடல் பலரது பாராட்டையும் கவனத்தையும் பெற்றது. இதன் மூலம் ஒரு நல்ல பாடகர் என்கிற பெருமையையும் பெற்றார். மேலும் இவரது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.