முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக்கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்பதில் இலங்கை அணிக்கு சிக்கல்… நாளை முடிவு தெரிகிறது…

உலகக்கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்பதில் இலங்கை அணிக்கு சிக்கல்… நாளை முடிவு தெரிகிறது…

இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி

உலகக்கோப்பையில் முதல் 8 அணிகள் மட்டுமே நேரடியாக தகுதி பெறும். மற்ற 2 அணிகள் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்டத்தில் பங்கேற்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி நேரடியாக தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலகக்கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்க முடியும். 1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி உலகக்கோப்பையை வென்றது. அந்த அணிக்குத்தான் தற்போது மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை  2-0 என்ற கணக்கில் இலங்கை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2 ஆவது ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் வரிசையில் 9 ஆவது இடத்தில் இலங்கை இருக்கும் நிலையில், நாளை நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டியில் தோற்று விட்டால் மேலும் இடங்களை இழக்க வாய்ப்புள்ளது.

8 ஆவது இடத்தில் இலங்கையை விட 6 புள்ளிகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கிறது. உலகக்கோப்பையில் முதல் 8 அணிகள் மட்டுமே நேரடியாக தகுதி பெறும். மற்ற 2 அணிகள் தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்டத்தில் பங்கேற்கும். இதனால் இலங்கை அணிக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கட்டாய வெற்றியை நோக்கி வெள்ளியன்று இலங்கை அணி களம் காண்கிறது.

First published:

Tags: Cricket