முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டி- இன்று 2 தங்கப் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகள்

உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டி- இன்று 2 தங்கப் பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனைகள்

பாக்ஸிங்கில் வென்றவர்கள்

பாக்ஸிங்கில் வென்றவர்கள்

உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் இன்று இந்திய வீராங்கனைகள் இருவர் தங்கப் பதக்கம் வென்றனர்.

  • Last Updated :
  • Delhi, India

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் 4 பிரிவுகளில் இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தனர்.

நேற்று மாலை நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சாய் கானை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிது கங்காஸ், 5க்கு0 என வெற்றி பெற்று, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 81 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் சவீதி பூரா சீனாவின் வாங் லினாவை எதிர்கொண்டார்.

முதல் இரு சுற்றுகளில் சவீதி ஆதிக்கம் செலுத்திய நிலையில், 3-வது சுற்றில் சீன வீராங்கனை சற்றே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். எனினும் ஆட்ட நுணுக்கம் அடிப்படையில் நடுவர்களின் தீர்ப்பால், இந்தியாவுக்கு 2-வது தங்கத்தை உறுதி செய்தார் சவீதி பூரா.

இது அவர் உலக குத்துச்சண்டை போட்டிகளில் வென்ற 2-வது பதக்கமாகும். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சவீதி, வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இன்று நடைபெற்ற வேறு இரு இறுதிப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர்.

top videos

    50 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீனும், 75 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்கைனும் மோதினர். அதில், 75 கிலோ எடைப் பிரிவில் மோதிய லவ்லினா தங்கம் வென்று அசத்தினார். அதேபோல 50 கிலோ எடைப் பிரிவில் மோதிய நிகத் ஜரீன், வியட்நாம் வீராங்னை நிகுயென் தி டம்மை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை வென்றார்.

    First published: