தென்காசி மாவட்டம் இலத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் தஞ்சாவூர், சிவகங்கை , சென்னை, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து 250 மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் சிலம்பம் டிரஸ்ட் மற்றும் சிலம்பம் மார்ஷியல் ஆர்ட் ரிசோர்சஸ் மற்றும் ட்ரெய்னிங் இணைந்து நடத்திய நான்காவது, மாநில அளவிலான சிலம்பப் போட்டி இலத்தூர் ஸ்பெக்ட்ரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் தஞ்சாவூர், சிவகங்கை , சென்னை, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து 250 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த சிலம்பப் போட்டியில் தனித்திறமை போட்டி மற்றும் அடிமுறை போட்டியும் நடைபெற்றது. இதில், பங்கேற்று முதல் மூன்று பரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பையும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் தனித்திறமை மற்றும் சண்டை விளையாட்டு ஆகிய இரு பிரிவிலும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பெருவாரியான முதலிடங்களை கைப்பற்றி ஒட்டு மொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை (overall championship) வென்றனர். அடுத்தபடியாக அதிக முதலிடங்களை பெற்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
விழாவில் எஸ்.தங்கபாண்டியன், ஸ்பெக்டரம் பள்ளி முதல்வர் ஆர்.ஹீனோ சீதா, மருத்துவர் அப்துல் அஜீஷ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முன்னதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் சிலம்ப ஆசிரியர், கொற்றவன் வரவேற்புரை வழங்கினார். நிறைவாக தலைமைப் பேராசான் அ.அருணாசலம் நன்றியுரை வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi