முகப்பு /செய்தி /விளையாட்டு / உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங்!

சரப்ஜோத் சிங்

சரப்ஜோத் சிங்

Sarabjot Singh win ISSF World Cup gold | இந்திய வீரரான வருண் தோமர் 250.3 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பெற்று வெண்கலம் வென்றார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இறுதி சுற்றில், சரப்ஜோத்சிங் 253.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.

அஜர்பைஜானின் ரஸ்லான் ருனெவ் 251.9 புள்ளிகளுடன் 2ஆவது இடமும், மற்றொரு இந்திய வீரரான வருண் தோமர் 250.3 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பெற்று வெண்கலம் வென்றார். பெண்களுக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை மானு பாக்கர், திவ்யா சுப்பராஜூ, ரிதம் சாங்வான் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

First published:

Tags: Shooting