முகப்பு /செய்தி /விளையாட்டு / MotoGP ஒளிபரப்பு உரிமம் - வென்றது வயகாம் 18 நிறுவனம்

MotoGP ஒளிபரப்பு உரிமம் - வென்றது வயகாம் 18 நிறுவனம்

MotoGPTM

MotoGPTM

வயகாம்18 நிறுவனம் MotoGP என்ற இந்த புதிய பரிமாணத்தை நாட்டின் அனைத்து மூலைகளிலும் கொண்டு சென்று அதிக ரசிகர்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

MotoGP போட்டிகளை பிரத்தியேகமாக ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ்18 இல் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் ஒப்பந்தத்தை வயகாம்18 நிறுவனம் வென்றுள்ளதை அறிவித்துள்ளது. MotoGP உலக சாம்பியன்ஷிப் என்பது உலகின் மிக உயர்ந்த மோட்டார் சைக்கிள் பந்தயமாகும். இதில் மிகவும் திறமையான ரைடர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். மேலும் இதில் பங்கேற்கும் உலகத்தின் வேகமான முன்மாதிரியான மோட்டார் சைக்கிள்கள் முன்னணி உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகிறது. 2023 சீசன் மிகப்பெரிய சாதனையாக 21 பந்தயங்கள் 18 நாடுகளில் நடைபெறுகிறது.

இந்தியாவில் உள்ள MotoGP-ன் 11 அணிகளின் 22 ரைடர்கள் செப்டம்பர் 22 மற்றும் 24ம் தேதி வரை இந்தியாவின் கிராண்ட் பிரிக்ஸிற்காக இந்திய கடற்கரைக்கு வருகிறார்கள். Moto2 மற்றும் Moto3 பந்தயங்கள் உட்பட, இந்திய சுற்றில் 80 ரைடர்கள் மற்றும் 40 அணிகள் மோட்டோர் சைக்கிள் பந்தயத்தில் இடம் பெறுகிறார்கள்.

"MotoGP என்பது உலகின் மிக வியத்தகு பந்தய நிகழ்வுகளில் ஒன்றாகும். மேலும் இந்த தொடர் இந்தியாவில் இந்த செப்டம்பரில் அறிமுகமாகவுள்ளதால் இந்திய விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். "இந்தியாவில் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்கு உலகின் மிகச்சிறந்த மோட்டார் சைக்கிள் பந்தய நிகழ்ச்சியை வழங்க நாங்கள் காத்திருக்கிறோம். மேலும் எங்கள் பன்முகப்படுத்தப்பட்ட சேவைகள் மூலம் எங்கள் ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்துகிறோம் என்று வயகாம் 18 நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் வியூகம் மற்றும் பார்ட்னர்ஷிப்ஸ் தலைவர் ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

Dorna CEO, கார்மெலோ எஸ்பெலெட்டா மேலும் கூறியதாவது: "இந்தியாவில் எங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு விளையாட்டைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மோட்டார் சைக்கிள் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியா தொழில்துறைக்கு ஒரு முக்கிய சந்தையாகவும் உள்ளது. எனவே, இரு சக்கர உலகின் உச்சமாக MotoGP-ன் இந்த புதிய முயற்சியை நாங்கள் மிகவும் உற்சாகமாக வரவேற்கிறோம்.

வயகாம்18 நிறுவனம் MotoGP என்ற இந்த  புதிய பரிமாணத்தை நாட்டின் அனைத்து மூலைகளிலும் கொண்டு சென்று அதிக ரசிகர்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோசினிமாவை (iOS & Android) பதிவிறக்கம் செய்வதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை தொடர்ந்து பார்க்கலாம். சமீபத்திய நிகழ்வுகள், செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் Facebook, Instagram, Twitter மற்றும் YouTube இல் ஸ்போர்ட்ஸ்18 - ஐப் பின்தொடரலாம் மற்றும் Facebook, Instagram, Twitter மற்றும் YouTube இல் ஜியோசினிமாவை பின்தொடரலாம்.

இந்த போட்டியின் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு MotoGP Bharat ஐ Facebook, Twitter மற்றும் Instagram ஆகியவைகளில் பின்பற்றவும்.

First published:

Tags: Sports