முகப்பு /செய்தி /விளையாட்டு / பி.எஸ்.ஜி. அணியில் இருந்து லயோனல் மெஸ்ஸி வெளியேற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி

பி.எஸ்.ஜி. அணியில் இருந்து லயோனல் மெஸ்ஸி வெளியேற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி

லயோனல் மெஸ்ஸி

லயோனல் மெஸ்ஸி

பி.எஸ்.ஜி. அணிக்காக 32 கோல்கள் அடித்ததுடன், 35 கோல்களுக்கு அசிஸ்ட் செய்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தான் இணையவுள்ள புதிய அணி குறித்த அறிவிப்பை மெஸ்ஸி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில ரசிகர்கள் உள்ளனர். நடந்த முடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி முக்கிய காரணமாக இருந்தார். உலகக்கோப்பைக்கு முன்னரே புகழின் உச்சியில் இருந்த மெஸ்ஸிக்கு, இந்த வெற்றி அவரது இமேஜை இன்னும் உயர்த்தியது.

தேசிய அணியை தவிர்த்து மெஸ்ஸி பிரான்சை சேர்ந்த பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் அணியில் நீடித்த நிலையில் தற்போது அவர் அணியை விட்டு விலகியுள்ளார். சமீபத்தில் அவர் பி.எஸ்.ஜி. நிர்வாகத்தின் அனுமதியின்றி அவர் சவுதி அரேபியாவுக்கு சென்றார். இந்த நிகழ்வு அணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. பி.எஸ்.ஜி மற்றும் கிளெர்மோன்ட் இடையிலான போட்டியை தொடர்ந்து மெஸ்ஸி அணியில் இருந்து விடைபெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இந்த போட்டி நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கியபோது பி.எஸ்.ஜி. அணியின் ரசிகர்கள் மெஸ்ஸியை அவமானப்படுத்தும் வகையில் கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி. அணி வெற்றி பெற்றது. இத்துடன் மெஸ்ஸி அணியை விட்டு விலகினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அணிக்கும், பாரிஸ் நகரத்திற்கும் அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2 ஆண்டுகளாக நீங்கள் அளித்த ஆதரவை மறக்க முடியாது. பி.எஸ்.ஜி. அணியின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க - 41 ஆண்டுகால ரிக்கார்டை முறியடித்த இங்கிலாந்தின் ஒல்லி போப்… குவியும் பாராட்டு

பி.எஸ்.ஜி. அணிக்காக 32 கோல்கள் அடித்ததுடன், 35 கோல்களுக்கு அசிஸ்ட் செய்துள்ளார். மேலும் 2 ஃப்ரென்ச் தொடரில் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பங்களிப்பு செய்துள்ளார் மெஸ்ஸி. அடுத்ததாக மெஸ்ஸி எந்த அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Lionel Messi