முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆசிய பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி… பிரதமர் மோடி பாராட்டு

ஆசிய பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி… பிரதமர் மோடி பாராட்டு

சாத்விக் மற்றும் சிராக்

சாத்விக் மற்றும் சிராக்

ஆசிய கோப்பை பேட்மின்டன் தொடரில் 58 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி கோப்பையை வென்றிருப்பதால் இந்த போட்டி சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

துபாயில் நடைபெற்ற ஆசிய பேட்மின்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதையொட்டி வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 40 ஆவது ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய வீரர்கள் முதல் சில ஆட்டங்களில் வெளியேறிய நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சிறப்பாக விளையாடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர்களை மலேசியாவின் ஓய் ய சின் – தியோ ஈயி இணையை நேற்று எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 16-21, 21-17, 21-19 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை இந்திய வீரர்கள் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இதையடுத்து பதக்கம் வென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை கூறி வருகிறார்கள்.

ஆசிய கோப்பை பேட்மின்டன் தொடரில் 58 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி கோப்பையை வென்றிருப்பதால் இந்த போட்டி சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக 1965 ஆம் ஆண்டு நடந்த ஆசிய பேட்மின்டன் போட்டியின்போது இந்திய அணி தங்கம் வென்றது. இந்நிலையில் 58 ஆணடுகளுக்கு பின்னர் தங்க பதக்கம் வென்றுள்ள இந்திய பேட்மின்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இருவரும் இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்களால் இந்திய நாடு பெருமை கொள்கிறது. பதக்கம் வென்ற வீரர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

top videos
    First published:

    Tags: Badminton