முகப்பு /செய்தி /விளையாட்டு / 21 வயதில் சாம்பியன்... சர்வதேச பேட்மிண்டனில் மகுடம் சூடிய பிரியன்ஷூ

21 வயதில் சாம்பியன்... சர்வதேச பேட்மிண்டனில் மகுடம் சூடிய பிரியன்ஷூ

பிரியன்ஷூ

பிரியன்ஷூ

சர்வதேச பேட்மிண்டன் தொடரில் முதல்முறையாக பிரியன்ஷூ மகுடம் சூடியுள்ளார்.

  • Last Updated :
  • Internationa, IndiaFrance

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 21 வயதான இந்திய வீரர் பிரியன்ஷூ முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரியன்ஷூ, 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்குப் பதிலடியாக, மேக்னஸ் 2-வது செட்டை 21-19 என வென்றார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை பிரியன்ஷூ ரஜாவத் 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து 21-15, 19-21, 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் மேக்னசை வீழ்த்தி பிரியன்ஷூ சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் முதல்முறையாக பிரியன்ஷூ மகுடம் சூடியுள்ளார்.

இதுகுறித்து பேசிய பிரியன்ஷூ, “நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனக்கு மிகப்பெரிய வெற்றி. ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் வென்றதை மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்” என்றார்.

top videos
    First published: