முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றிலேயே இந்தியாவின் லக்ஷ்யா சென் வெளியேற்றம்

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றிலேயே இந்தியாவின் லக்ஷ்யா சென் வெளியேற்றம்

இந்திய வீரர் லக்ஷ்யா சென்

இந்திய வீரர் லக்ஷ்யா சென்

2 ஆவது செட்டில் சுதாரித்துக் கொண்டு லக்ஷ்யா சென் விளையாடிதயால் ஆட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது. இந்த முறை சிங்கப்பூர் வீரருக்கு இணையான ஆட்டத்தை லக்ஷ்யா சென் வெளிப்படுத்தினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் லக்ஷ்யா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். 40 ஆவது ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆன்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் இந்தியாவின் லக்ஷ்யா சென் மற்றும் சிங்கப்பூரை சேர்நத முன்னாள் உலக சாம்பியன் லோஹ் கியான் யே ஆகியோர் மோதினர். லக்ஷ்யா சென் திறமையான ஆட்டக்காரர் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இருப்பினும் லோஹ் கியானின் அதிரடி விளையாட்டிற்கு ஈடு கொடுக்க முடியாமல் 7-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார்.

2 ஆவது செட்டில் சுதாரித்துக் கொண்டு லக்ஷ்யா சென் விளையாடிதயால் ஆட்டத்தில் பரபரப்பு காணப்பட்டது. இந்த முறை சிங்கப்பூர் வீரருக்கு இணையான ஆட்டத்தை லக்ஷ்யா சென் வெளிப்படுத்தினார். இருப்பினும் கடைசி நேரத்தில் 21-23 என்ற கணக்கில் லோஹ் கியான் யே 2 ஆவது செட்டை கைப்பற்றி முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இந்த பரபரப்பான ஆட்டம் மொத்தம் 37 நிமிடங்கள் நீடித்தது.

முன்னதாக மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் உலக தரத்தில் 42 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மாளவிக பன்சோட், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். 46 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில்  23-25, 19-21 என்ற செட் கணக்கில் யமகுச்சி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

First published:

Tags: IPL, IPL 2023