முகப்பு /செய்தி /விளையாட்டு / பாலியல் புகார்.. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்!

பாலியல் புகார்.. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம்!

போராட்டத்தில் வீரர்கள்

போராட்டத்தில் வீரர்கள்

குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது.

top videos

    அதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது. பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாத நிலையில் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பஜ்ரங் புனியா, விக்னேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2 மாதங்களுக்கு பிறகும், தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

    First published: