முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL Final : மும்பை அணி வெற்றி பெற 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி…

WPL Final : மும்பை அணி வெற்றி பெற 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி…

மகளிர் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

மகளிர் ஐபிஎல் கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி வெற்றி பெற 132 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. மகளிர் ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை ப்ராபோன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியின் தொடக்க வீராங்கனை ஷெபாலி வர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஆலிஸ் கேப்ஸி ரன் ஏதும் எடுக்காமலும், ஜெமிமா ரோட்ரிகஸ் 9 ரன்னிலும் வெளியேறினர். இதனால் 35 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறத் தொடங்கியது. அடுத்து இணைந்த மேரிசன் கேப் – கேப்டன் மெக் லேனிங் இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடியது. மெக் லேனிங் 35 எடுத்து ஆட்டமிழக்க மேரிசன் கேப் 18 ரன்னில் வெளியேறினார். பின்னர் களத்தில் இறங்கிய ஜெஸ் ஜோனசன் 2 ரன்னும், அருந்ததி ரெட்டி ரன் ஏதும் எடுக்காமலும், மின்னு மணி 1 ரன்னும், தனியா பாட்டியா ரன் ஏதும் எடுக்காமம் வெளியேறினர். 79 ரன்னுக்கு 9 விக்கெட் என்ற நிலையில் டெல்லிஇருந்தபோது, கடைசி விக்கெட்டிற்கு ஷிகா பாண்டே – ராதா யாதவ் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கியதால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் தலா 27 ரன்களை குவிக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே – ராதா யாதவ் ஆகியோர் கடைசி விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணி வெற்றி பெற 132 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. மகளிர் ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை ப்ராபோன் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி அணியின் தொடக்க வீராங்கனை ஷெபாலி வர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஆலிஸ் கேப்ஸி ரன் ஏதும் எடுக்காமலும், ஜெமிமா ரோட்ரிகஸ் 9 ரன்னிலும் வெளியேறினர். இதனால் 35 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறத் தொடங்கியது. அடுத்து இணைந்த மேரிசன் கேப் – கேப்டன் மெக் லேனிங் இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்து விளையாடியது. மெக் லேனிங் 35 எடுத்து ஆட்டமிழக்க மேரிசன் கேப் 18 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களத்தில் இறங்கிய ஜெஸ் ஜோனசன் 2 ரன்னும், அருந்ததி ரெட்டி ரன் ஏதும் எடுக்காமலும், மின்னு மணி 1 ரன்னும், தனியா பாட்டியா ரன் ஏதும் எடுக்காமம் வெளியேறினர். 79 ரன்னுக்கு 9 விக்கெட் என்ற நிலையில் டெல்லிஇருந்தபோது, கடைசி விக்கெட்டிற்கு ஷிகா பாண்டே – ராதா யாதவ் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கியதால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் தலா 27 ரன்களை குவிக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து  131 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே – ராதா யாதவ் ஆகியோர் கடைசி விக்கெட்டிற்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

First published:

Tags: WIPL