முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரர் யார்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரர் யார்?

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

கடந்த 1 ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கே.எல்.ராகுல் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கான மாற்று வீரர் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடரில் கணிசமான ரன்களை சேர்த்து வந்தார். இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பில் இருந்த அவர், மோசமான ஆட்டம் காரணமாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அதனுடன் அணியின் கடைசி பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கி வெற்றிக்காக போராடினார். இருப்பினும் இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் மீதம் உள்ள ஆட்டங்களில் ராகுல் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அணியின் கேப்டனாக க்ருணல் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். இருப்பினும் மாற்று கேப்டன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

top videos

    இதற்கிடையே ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர் ஜூன் 7 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. தற்போது கே.எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கான மாற்று வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அணியின் முக்கிய ஆட்டக்காரரான ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. 48 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,985 ரன்கள் எடுத்திருக்கிறார். இதேபோன்று 21 வயதாகியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 15 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,845 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 80.21 ரன்கள். ராகுலுக்கு பதிலாக யஷஸ்வி அணியில் சேர்க்கப்படலாம். மற்றொரு வீரரான சர்ப்ராஸ் கான் 37 முதல் தர போட்டிகளில் விளையாடி 3,505 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 79.65 ரன்கள். இவரும் கே.எல் . ராகுலுக்கு பதிலாக அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023