முகப்பு /செய்தி /விளையாட்டு / உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் இந்திய அணி…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி கோப்பை எதையும் இந்திய அணி பெறாத நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தயாராகி வருகிறது. முதற்கட்டமாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதை தொடர்ந்து அந்த அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோருடன், அஷ்வின், அக்சர் படேல், ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்கள் லண்டன் புறப்பட்டு செல்கிறார்கள்.

இவர்களுடன்இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் தலைமையின் கீழ், உதவியாளர்களும் லண்டன் புறப்பட்டு செல் கின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு இந்திய அணியின் முதல் குழு லண்டன் புறப்பட்டு செல்லும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - IPL 2023 : ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளின் அட்டவணை… விதிமுறைகள் என்ன தெரியுமா?

top videos

    ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சுப்மன் கில், முகமது ஷமி, ரஹானே உள்ளிட்டோர் விளையாடி வருவதால் அவர்கள் தாமதமாக புறப்படவுள்ளனர். மற்றொரு முக்கிய ஆட்டக்காரரான செதேஷ்வர் புஜாரா இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது. 2021 இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்று தோல்வியடைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி கோப்பை எதையும் இந்திய அணி பெறாத நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023