முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா பஞ்சாப் அணி? டெல்லி கேபிடல்சுடன் மோதல்

IPL 2023 : ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா பஞ்சாப் அணி? டெல்லி கேபிடல்சுடன் மோதல்

டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்

டெல்லி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறும என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இவற்றில் டெல்லி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்கும் நோக்கத்தில் பஞ்சாப் அணி இன்று களம் காண்கிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் அடுத்ததாக அதிக வெற்றிகளைப் பெற்ற முதல் 4 அணிகள் பங்கேற்கும் ப்ளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. 13 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தொடரிலிருந்து டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் வெளியேறியுள்ளன. மற்ற 7 அணிகளுக்கு இடையே ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டி நடந்து வருகிறது. குறிப்பாக பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் 12 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருக்கின்றன.

top videos

    இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி டெல்லியை வென்று விட்டால் 14 புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்திற்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தால் பஞ்சாப் அணி ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறி விடும்.  அத்துடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்க வைத்துக் கொள்ளும்.  இன்னொரு பக்கம் டெல்லி அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறும என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023