முகப்பு /செய்தி /விளையாட்டு / முதல் வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்? பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

முதல் வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்? பெங்களூரு அணியுடன் இன்று மோதல்

டேவிட் வார்னர் - டூப்ளசிஸ்

டேவிட் வார்னர் - டூப்ளசிஸ்

டெல்லி அணியின் தொடர் தோல்விக்கு கேப்டன் வார்னர் மட்டுமே குறிவைக்கப்படுகிறார். இந்நிலையில் சக வீரர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியடைந்துள்ள நிலையில் இன்று பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது புள்ளி கணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில் டெல்லி அணியின் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. இதற்காக அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

பாயின்ட்ஸ் டேபிளில் 0 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் -1.576 யை பெற்று 10 ஆவது இடத்தில் டெல்லி அணி உள்ளது. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று நெட் ரன் ரேட்டை உயர்த்தினால் மட்டுமே அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. டேவிட் வார்னர், அக்சர் படேல் போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரித்வி ஷா, மனிஷ் பாண்டே போன்ற இந்திய வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடததும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது. தனது திருமணத்தை முடித்துக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கவுள்ளார்.

top videos

    வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் இன்று வாய்ப்பு வழங்கப்படாது என தகவல்கள் வெளிவந்துள்ளன. மதியம் 3.30-க்கு தொடங்கவுள்ள பெங்களூரு – டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பின்வரும் வீரர்கள் டெல்லி அணியில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்- டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மணிஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், ரிலீ ரூசோ அல்லது ரோமன் பவெல், அக்சர் படேல், லலித் யாதவ், அபிஷேக் போரெல் (விக்கெட் கீப்பர்), ஆன்ரிக் நோட்ஜ், கலீல் அகமது. டெல்லி அணியின் தொடர் தோல்விக்கு கேப்டன் வார்னர் மட்டுமே குறிவைக்கப்படுகிறார். இந்நிலையில் சக வீரர்களும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தோல்விக்கு முக்கிய காரணமாக உள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023