சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்ததாக யார் கேப்டனாக வருவார் என்பது குறித்த கேள்விக்கு முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் விளக்கம் அளித்துள்ளார். தோனியின் தலைமையின் கீழ் சென்னை அணி 4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. சென்னை அணியின் கேப்டனாக கடந்த சீசனின் தொடக்கத்தில் ரவிந்திர ஜடேஜா சில போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக இருந்தார். இதைத் தவிர்த்து மற்ற போட்டிகள் அனைத்திலும் தோனி மட்டுமே சென்னை அணியை வழி நடத்தியுள்ளார்.
41 வயதாகும் தோனி இன்றைக்கும் இளம் வீரரைப் போன்று களத்தில் அற்புதமாக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியிலும் பிரமாண்ட சிக்சர்களை அடித்து எதிரணி ரசிகர்களை தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்திருந்தார் தோனி. இந்நிலையில் சென்னை அணியில் அடுத்த கேப்டனாக தோனிக்கு பின்னர் யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை அணியின முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான கேதர் ஜாதவ் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
தோனிக்கு பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் தான் சென்னை அணியின் கேப்டனாக வருவார் என்று நான் நினைக்கிறேன். பென் ஸ்டோக்ஸ், ரவிந்திரா ஜடேஜாவுக்கும் இந்த தகுதி இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் இந்த முறை சென்னை அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாட வேண்டும். அவர் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் என்பதால் அவர் தொடர்ந்து ஐபிஎல் சீசனில் இடம்பெறுவது கடினம். எனவே என்னைப் பொருத்தளவில் ருதுராஜ் கெய்வாட் தான் தோனிக்கு பின்னர் சென்னை அணிக்கான கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்சை சென்னை அணி ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 2020-ஆம் ஆண்டு முதல் அணியில் நீடித்து வருகிறார். சென்னை அணி பேட்டிங் வரிசையில் முதுகெலும்பாக இருக்கும் ருதுராஜின் சராசரி 40 ரன்னுக்கும், ஸ்ட்ரைக் ரேட் 130-க்கும் அதிகமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.